கே.எல் ராகுல் என்கிட்ட சொன்னது கரெக்ட் தான்.. இந்திய அணியின் கோச் பதவி எனக்கு வேண்டாம் – ஜஸ்டின் லாங்கர் கருத்து

Langer
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிடின் பதவிக்காலம் எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடருடன் முடிவுக்கு வருகிறது. அதனை தொடர்ந்து தான் இந்திய அணியின் பயிற்சியாளராக நீடிக்க விரும்பவில்லை என்று டிராவிட் அறிவித்து விட்டதால் புதிய பயிற்சியாளரை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஐபிஎல் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் வேளையில் இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகமான பிசிசிஐ அடுத்த பயிற்சியாளர் தேடலை துவங்கிவிட்டது.

அந்த வகையில் மே 28-ஆம் தேதி வரை இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் பெறப்படும் என்று அறிவித்துவிட்டது. அதுமட்டுமின்றி நேரடியாக சில முன்னாள் ஜாம்பவான்களிடமும் அடுத்த பயிற்சியாளர் பதவிக்காக பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங், வி.வி.எஸ் லக்ஷ்மணன், ஜஸ்டின் லாங்கர் ஆகியோருக்கு பிசிசிஐ முன்னுரிமை அளித்து வருவதாகவும் அவர்களில் ஒருவர் பயிற்சியாளராக இருப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக தான் விரும்பவில்லை என ஜஸ்டின் லாங்கர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : தற்போது நான் ஐ.பி.எல் தொடரில் லக்னோ அணியின் பயிற்சியாளராக இருந்து வருகிறேன். அதனால் லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுலுடன் இந்திய அணியின் பயிற்சியாளர் குறித்து உரையாடினேன். அப்போது பயிற்சியாளர் பதவி குறித்து கே.எல் ராகுல் எனக்கு சில சரியான கருத்துக்களை கூறியிருந்தார். அப்படி அவர் கூறுகையில் :

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் எதிர்கொள்ளும் அரசியலும், அழுத்தமும் சாதாரனமானது அல்ல.. இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி என்பது ஐபிஎல் பயிற்சியாளர்களை விட ஆயிரம் மடங்கு அழுத்தம் அதிகமாக இருக்கும் என்று தெரிவித்தார். அவர் கூறிய அந்த கருத்து எனக்கு மிகவும் சரியானதாக தோன்றுகிறது. ஏற்கனவே நான் ஆஸ்திரேலியா அணிக்காக நான்கு ஆண்டுகள் பயிற்சியாளராக இருந்த அனுபவத்தை உடையவன்.

இதையும் படிங்க : சிஎஸ்கே அணியிலிருந்து வெளியேறிய பிளமிங் இந்தியாவின் பயிற்சியாளர் ஆகிறரா? காசி விஸ்வநாதன் பதில்

ஒரு தேசிய அணிக்கு பயிற்சி அழகாக இருக்கும் போது என்னென்ன அழுத்தங்கள் இருக்கும் என்பதை எனக்கு தெளிவாக தெரியும் மேலும் இந்திய அணியுடன் பயிற்சியாளராக பயணிப்பது அதிக சோர்வையும் ஏற்படுத்தும் எனவே எனக்கு இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி வேண்டவே வேண்டாம் என்று தெரிவித்து விட்டதாக

Advertisement