சிஎஸ்கே அணியிலிருந்து வெளியேறி பிளமிங் இந்தியாவின் பயிற்சியாளர் ஆகிறரா? காசி விஸ்வநாதன் பதில்

Kasi Viswanathan 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் ஜாம்பவான் வீரர் ராகுல் டிராவிட் செயல்பட்டு வருகிறார். கடந்த 2021 டி20 உலகக் கோப்பையுடன் விடைபெற்ற ரவி சாஸ்திரிக்கு பின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற அவருடைய பதவி காலம் கடந்த 2023 உலகக் கோப்பையுடன் நிறைவு பெற்றது. அப்போது தற்காலிகமாக அவருடைய பதவியை மீண்டும் பிசிசிஐ நீட்டிப்பு செய்திருந்தது.

அந்த காலமும் தற்போதும் முடிவு பெறுவதால் புதிய பயிற்சியாளர்களுக்கான தேடலில் பிசிசிஐ இறங்கியுள்ளது. தற்போதைய நிலைமையில் அந்த பதவிக்கு கௌதம் கம்பீர், விவிஎஸ் லக்ஷ்மன், ஆசிஸ் நெஹ்ரா போன்ற முன்னாள் இந்திய வீரர்கள் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன. குறிப்பாக அரசியலில் இருந்து விலகியுள்ள கௌதம் கம்பீர் கொல்கத்தா அணியின் ஆலோசகராக அற்புதமாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

இந்தியாவின் பயிற்சியாளர்:
அவருடைய தலைமையில் கொல்கத்தா ஐபிஎல் 2024 ஃபைனலுக்கு சென்று அசத்தியுள்ளது. எனவே அவரை இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ அணுகியதாகவும் செய்திகள் வலம் வருகின்றன. அதே சமயம் ஸ்டீபன் பிளமிங், ரிக்கி பாண்டிங், ஜஸ்டின் லாங்கர் போன்ற வெளிநாட்டு முன்னாள் ஜாம்பவான் வீரர்களையும் பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ விரும்புவதாக செய்திகள் காணப்படுகின்றன.

குறிப்பாக 2008 முதல் சிஎஸ்கே வெற்றிகரமாக செயல்பட்டு 5 கோப்பையை வெல்வதற்கு முன்னாள் நியூசிலாந்து வீரர் ஸ்டீபன் பிளமிங் முக்கிய காரணமாக இருக்கிறார். எனவே அவரை இந்தியாவின் பயிற்சியாளராக நியமிக்க தோனியின் உதவியை பிசிசிஐ நாடியதாகவும் செய்திகள் வெளிவந்தன. ஒருவேளை இந்தியாவின் பயிற்சியாளராக பிளெமிங் பொறுப்பேற்றால் விதிமுறைப்படி மேற்கொண்டு சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக செயல்பட முடியாது.

- Advertisement -

இந்நிலையில் வருடத்திற்கு 9 முதல் 10 மாதங்கள் வரை செய்ய வேண்டிய கடினமான இந்திய அணியின் பயிற்சியாளரை ஸ்டீபன் பிளமிங் ஏற்க மாட்டார் என்று நம்புவதாக சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவர் இந்திய அணியுடன் வேலை செய்வதில் ஆர்வமாக இருக்கிறாரா என்பதை கேட்க செய்தியாளர்களிடமிருந்து எனக்கு நிறைய அழைப்புக்கள் வந்தது. எனவே நானும் அந்த கேள்வியை அவரிடம் கேட்டேன்”

இதையும் படிங்க: 2022 மாதிரி தோனியை வைத்து சிஎஸ்கே செய்த தவறே.. 2024 ஐபிஎல் தோல்விக்கு காரணம்.. ஏபிடி கருத்து

“நீங்கள் இந்திய அணியின் பயிற்சியாளர் வேலைக்கு விண்ணப்பிக்கிறீர்களா? என்று பிளமிங்கிடம் கேட்டேன். அதற்கு என்னை நீங்கள் விண்ணப்பிக்க சொல்கிறீர்களா? என்று அவர் ஜாலியாக பதிலளித்தார். அந்த வகையில் இந்த வேலையை அவர் செய்ய மாட்டார் என்பது எனக்குத் தெரியும். ஏனெனில் வருடத்தில் 9 முதல் 10 மாதங்கள் வரை அவர் வெளிநாட்டில் இருக்க விரும்ப மாட்டார். அது தான் என்னுடைய உணர்வாகும். இதைத் தவிர்த்து அவரிடம் மேற்கொண்டு எதையும் நான் விவாதிக்கவில்லை” என்று கூறினார்.

Advertisement