தோனி போன்ற ஒருவர் எங்கள் அணிக்கு வேண்டும். அவர் மாதிரி இருப்பவர்களால் மட்டுமே இது சாத்தியம் – ஆஸி பயிற்சியாளர் பேட்டி

Langer
- Advertisement -

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்து படுதோல்வி அடைந்தது. இந்த தொடரின் தோல்விக்கு முக்கிய காரணமாக ஆட்டத்தை கடைசி வரை இருந்து வெற்றிகரமாக முடிக்கும் வீரர்கள் இல்லை என அந்த அணி நிர்வாகம் கருதுகிறது.

Aus

- Advertisement -

மேலும் மிடில் ஆர்டரில் விளையாடும் வீரர்கள் பலரும் சொதப்பியதால் இந்த தோல்வி ஏற்பட்டுள்ளதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன. இதனையடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மார்ச் 13ஆம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணி விளையாடுகிறது.

இதனிடையே ஆஸ்திரேலிய அணியில் இருக்கும் சிக்கல்கள் குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : எங்கள் அணியில் முன்பு இருந்த மைக்கல் ஹசி, மைக்கேல் பெவன் போன்ற மாஸ்டர் கிளாஸ் வீரர்கள் மிடில் ஆர்டரில் இருந்தார்கள்.

Hussey

அவர்களது பங்களிப்பின் மூலம் எங்கள் அணி இறுதி வரை சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. மேலும் அவர்களது ஃபினிஷிங் அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்று. அவர்கள் தொடர்ச்சியாக அந்த வேலையை சிறப்பாக செய்தார்கள்.

- Advertisement -

அதேபோல் மிடில் ஆர்டரில் பிரகாசிக்கும் வீரர்கள் தற்போது இல்லை. மேலும் மிடில் ஆர்டரில் தோனி ஒரு மாஸ்டர் அவர் போன்று ஒரு வீரர் கிடைத்தால் அது ஆஸ்திரேலிய அணிக்கு மிகவும் நல்லது ஏனெனில் இந்திய அணியை பல போட்டிகளில் அவர் சிறப்பாக வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவரது ஃபினிஷிங் போன்று எங்கள் அணிக்கு ஒரு சிலர் தேவை அது நடந்தால் எங்களால் அனைத்து போட்டிகளில் வெற்றி பெற முடியும் என்று கூறினார்.

dhoni

கடந்த சில வருடங்களாக 4 முதல் 7 வரை உள்ள இடங்களுக்கு 13 வீரர்களை பயன்படுத்தி உள்ளது ஆஸ்திரேலியா அணி. அதேபோல் ஆறாவது இடத்துக்கு மற்றும் 9 வீரர்களை பயன்படுத்தி பார்த்துள்ளது. இருப்பினும் அவர்களுக்கு சரியான வீரர்கள் அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement