சொன்னதை செஞ்சு முடிச்சுட்டாரு.. ஜஸ்டின் லேங்கர் பாராட்டு.. விராட் கோலியை திணறடித்த தமிழக வீரர் பேட்டி

M Siddharth 2
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் இரண்டாம் தேதி நடைபெற்ற 15வது லீக் போட்டியில் பெங்களூருவை 28 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ வீழ்த்தியது. பெங்களூருவில் நடந்த அந்த போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ குயின் டீ காக் 81, நிக்கோலஸ் பூரான் 40* ரன்கள் எடுத்த உதவியுடன் 182 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.

ஆனால் அதை சேசிங் செய்த பெங்களூரு சுமாராக விளையாடி 153 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக மகிபால் லோம்ரர் 33 ரன்கள் எடுத்த நிலையில் லக்னோ சார்பில் அதிகபட்சமாக மயங் யாதவ் 3 விக்கெட்டுகள் எடுத்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். முன்னதாக இந்தப் போட்டியில் பெங்களூரு அணியின் முதுகெலும்பாக கருதப்படும் விராட் கோலி 22 (16) ரன்கள் அடித்து நன்கு செட்டிலானார்.

- Advertisement -

லேங்கர் பாராட்டு:
ஆனால் அப்போது பவுண்டரி அடிக்க முயற்சித்த அவரை தமிழக வீரர் மணிமாறன் சித்தார்த் அவுட்டாக்கினார். 25 வயதாகும் அவர் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக அறிமுகமானார். அதில் முதல் போட்டியில் விக்கெட்டை எடுக்காத அவர் இப்போட்டியில் இந்தியாவின் ஜாம்பவான் வீரராக போற்றப்படும் விராட் கோலியை தம்முடைய கேரியரின் முதல் விக்கெட்டாக எடுத்து சாதனை படைத்தார்.

இந்நிலையில் மணிமாறன் சித்தார்த் பற்றி லக்னோ அணியின் பயிற்சியாளர் மற்றும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஜஸ்டின் லேங்கர் போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு. “இதற்கு முன் இவரிடம் நான் பேசியதில்லை. அவர் ஆர்ம் பந்து வீசுவதை பார்த்தேன். அப்படி சித்தார்த்தை பார்த்த பின் “ஹேய் சித். விராட் கோலியை உங்களால் அவுட்டாக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?” என்பதே என்னுடைய வாயிலிருந்து வந்த முதல் வார்த்தையாகும்”

- Advertisement -

“அதற்கு முடியும் சார் என்று அவர் என்னிடம் சொன்னார். தற்போது அவர் என்ன செய்துள்ளார் என்று பாருங்கள். விராட் கோலியை அவுட்டாக்கியுள்ளார்” என்று சொன்னதும் லக்னோ அணியினர் கைதட்டி மணிமாறனுக்கு பாராட்டு கொடுத்தனர். அதைத்தொடர்ந்து சித்தார்த் மணிமாறன் பேசியது பின்வருமாறு. “நான் எப்போதும் விராட் கோலியின் விக்கெட்டை எடுப்பதை கனவாக கொண்டிருந்தேன்”

இதையும் படிங்க: உலகில் வேறுயெந்த வீரரும் படைக்காத இமாலய சாதனையை டி20 கிரிக்கெட்டில் நிகழ்த்தி காட்டிய விராட் கோலி – விவரம் இதோ

“நீங்கள் யாரிடம் கேட்டாலும் விராட் கோலியின் விக்கெட்டை எடுப்பதை கனவு என்று சொல்வார்கள். அது மிகப்பெரிய விக்கெட். அதற்காக நான் அனைத்தையும் எளிதாக கடைபிடித்தேன். நான் என்னுடைய பலத்திற்கு ஆதரவு கொடுத்தேன். சரியான லென்த்தை பின்பற்றினால் என்னால் அணிக்கு நன்றாக செயல்பட முடியும் என்பது எனக்கு தெரியும்” என்று கூறினார்.

Advertisement