விராட் கோலி சிறந்த வீரர் தான். ஆனால் அவரை விட இவர் வேறலெவலில் ஆடுகிறார் – லாங்கர் பேட்டி

Langer
- Advertisement -

பர்மிங்காம் நகரில் நடைபெற்ற முதல் ஆஷஸ் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்து முக்கிய வீரராக திகழ்ந்தார்.

Smith 1

- Advertisement -

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் அளித்த பேட்டியில் கூறியதாவது : தற்போதைய வீரர்களின் வரிசையில் கோலி உலகின் சிறந்த வீரர் தான் அதனை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அவரை விட ஸ்மித் வேற லெவலில் சிறப்பாக விளையாடி வருகிறார் அதையும் நான் கூறுவேன்.

ஏனெனில் டெஸ்ட் போட்டிகளில் கிட்டத்தட்ட 60 ஆவரேஜ் வைத்து விளையாடுவது என்பது சவாலான விடயம். ஏனெனில் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் அனைத்து நாடுகளும் சென்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுஅது என்பது எளிதான விடயம் கிடையாது. சவாலான மைதானங்களில் கூட ஸ்மித் சிறப்பாக ஆடுகிறார்.

Smith

என்னை பொறுத்தவரை கோலியை விட தற்போதைய சிறந்த பேட்ஸ்மென் ஸ்மித் தான் என்று நான் கூறுவேன் என்று லாங்கர் பேட்டி அளித்தார். ஸ்மித் கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி ஒரு ஆண்டு தடைபட்டு மீண்டும் தற்போதுதான் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement