பாகிஸ்தான் டீம்ல தொடர்ச்சியா சேன்ஸ் கிடைக்கணுனா இதை பண்ணா தான் கிடைக்கும் – ஜுனைத் கான் விளாசல்

Junaid
- Advertisement -

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணிக்காக சிறப்பாக செயல்பட்ட அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜுனைத் கானை, 2019 ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை தொடரில் தேர்வு செய்யாமல் விட்டது பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம். அப்போது அது பெரும் சர்ச்சையாக வெடித்தது. பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தேர்வுக் குழு தலவராக இருக்கும் இன்சமாம் உல் ஹக் வேண்டுமென்றே ஜுனைத் கானை அணியிலிருந்து நீக்கிவிட்டார் என்ற விமர்ச்சனங்கள் அப்போது எழுந்தது. அதற்குப் பிறகும் ஜுனைத் கானை மொத்தமாக பாகிஸ்தான் அணியிலிருந்தே ஓரம்கட்டி வைத்திருக்கும் அந்த அணி நிர்வாகத்தை தற்போது ஒரு பேட்டியில் சரமாரியாக சாடியுள்ளார் ஜுனைத் கான்.

Junaid 1

- Advertisement -

கிரிக்கெட் பாகிஸ்தான்.காம் என்ற இணையதளத்திற்கு பேட்டியளித்த 31 வயதான ஜுனைத் கான் அப்பேட்டியில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் ஒரு வீரர் தொடர்ந்து இடம் பெற வேண்டுமென்றால், அவர் பாகிஸ்தான் அணியின் கேப்டனுடனும், அணி நிர்வாகத்துடனும் எப்போதும் தொடர்பில் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அந்த வீரர் பாகிஸ்தான் அணிக்காக விளையாடும் எண்ணத்தை மறந்து விட வேண்டும். இப்படித்தான் இருக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நிலமை. நான் பாகிஸ்தான் அணிக்காக மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்று விளையாடி உள்ளேன்.

அதில் மிக நன்றாகவே செயல்பட்டபோதும், அணி நிர்வாகம் எனக்கு வாய்ப்பளிப்பதை விரும்பவில்லை. 2017 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியதில் எனக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. ஏனெனில் அந்த தொடரில் ஹசன் அலிக்கு அடுத்தபடியாக அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரராக நான் தான் இருந்தேன். ஆனால் 2019 உலகக் கோப்பை தொடரில் எனக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்படாததோடு மட்டுமல்லாமல் அதற்குப்பிறகு என்னை அணியில் இருந்தே ஓரம் கட்டி விட்டனர்.

junaid 2

இரு போட்டிகளில் சரியாக விளையாடாமல் போனாலும் அந்த வீரரை அணியிலிருந்து தூக்கிவிட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குகிறார்கள். ஆனால் அந்த வீரர் அதற்கு முன் தன் அணிக்காக என்ன செய்தார் என்பதை நினைத்துப் பார்கக்கூட அவர்கள் விரும்பவில்லை. நான் ஆறு ஆண்டுகளாக பாகிஸ்தான் அணிக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளேன். ஆனால் நானாக ஓய்வு பெறவதற்கு முன்பாக அவர்கள் எனக்கு ஓய்வு கொடுத்துவிட்டார்கள். இதற்காக நான் மனம் தளரப்போவதில்லை. தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி மீண்டும் தேசிய அணியில் இடம் பிடிப்பேன் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

- Advertisement -

மேலும் நான் பாகிஸ்தானில் ஒரு கிராமத்திலிருந்து வந்தவன் என்பதால் எனக்காக பரிந்து பேச எந்த ஒரு ஊடகமும் முன்வரவில்லை. இதுவே ஒரு நகரத்தில் இருந்து வந்த வீரருக்கு இப்படி ஆகி இருந்தால் அனைத்து ஊடகங்களும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கேள்வி கேட்டிருக்கும். என்று அந்த பேட்டியில் அவர் கூறியிருக்கிறார்.

Junaid 3

31 வயதான ஜுனைத் கான் 2011ஆம் அண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் அறிமுகமாகி, தொடர்ந்து 6 ஆண்டுகள் மட்டுமே அவர் அந்த அணியில் இடம்பிடித்து வந்தார். 2019ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு அவருக்கு அணயில் இடம் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஜுனைத் கான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக 22 டெஸ்ட் போட்டிகளில் 71 விக்கெட்டும், 76 ஒரு நாள் போட்டிகளில் 110 விக்கெட்டும், 9 டி20 போடரடிகளில் 8 விக்கெட்டும் எடுத்துள்ளார்.

Advertisement