
இலங்கைக்கு எதிராக தன்னுடைய சொந்த மண்ணில் நடைபெற்று முடிந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் 27 வருடங்களாக இலங்கைக்கு எதிராக ஒரு ஒருநாள் தொடரில் தோற்க்காமல் இருந்து வந்த மாபெரும் கௌரவ சாதனையை இந்தியா காற்றில் பறக்க விட்டுள்ளது. இத்தனைக்கும் இலங்கையை விட தரமான வீரர்களை கொண்ட இந்தியா உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்கிறது.
ஆனால் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருந்தும் இலங்கை ஸ்பின்னர்களை எதிர்கொள்ள முடியாமல் இந்தியா அவமானத் தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக முதல் போட்டியில் 231 ரன்களை அடிக்க முடியாமல் சொதப்பிய இந்தியா சமன் செய்தது. 2வது போட்டியில் இன்னும் மோசமாக விளையாடிய இந்தியா 241 ரன்களை அடிக்க முடியாமல் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
ஹீரோ இல்லனா ஜீரோ:
இருப்பினும் 3வது போட்டியில் கண்டிப்பாக இந்தியா போராடி வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த போட்டியில் 249 ரன்களை துரத்தும் போது கொஞ்சமும் போராடாத இந்தியா 110 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. அதனால் 2010 ஆகஸ்ட் மாதத்திற்கு பின் 14 வருடங்கள் கழித்து முதல் முறையாக இலங்கைக்கு எதிராக அடுத்தடுத்த ஒருநாள் போட்டிகளில் இந்தியா தோற்றுள்ளது.
இந்த தோல்விக்கு சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில் இலங்கையின் ஸ்பின்னர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் திறம்பட எதிர்கொள்ளாதது முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா இல்லையென்றால் இந்திய அணியின் பவுலிங் ஜீரோ என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஜூனாய்ட் கான் கான் விமர்சித்துள்ளார். குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பையை வெல்ல உதவிய ஹீரோவான பும்ரா இந்தியாவின் முதன்மை பவுலராக போற்றப்படுகிறார்.
ஆனால் பும்ரா இல்லையென்றால் இந்தியாவின் பவுலிங் ஜீரோ என்று ஜூனாய்ட் கான் கசப்பான உண்மையை தெரிவித்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “பும்ரா இல்லாமல் இந்தியாவின் பவுலிங் ஜீரோ என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?” என பதிவிட்டுள்ளார். அவர் கூறுவது போல இத்தொடரில் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்திய பேட்ஸ்மேன்கள் இலங்கையை பாருங்க.. அந்த ஒரு ஷாட் அடிக்காததே தோல்விக்கு காரணம்.. ரோஹித் ஏமாற்றம்
அதன் காரணமாக மற்ற வேகப்பந்து வீச்சாளர்களான முகமது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் பொறுப்புடன் செயல்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆனால் அந்த இருவருமே சுழலுக்கு சாதகமான கொழும்பு பிட்ச்சில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. குறிப்பாக சீனியர் பவுலரான முகமது சிராஜ் இலங்கை பேட்ஸ்மேன்களிடம் அடிவாங்