- Advertisement -
டி20

எஸ்ஏ20: 85 ரன்ஸ்.. டு பிளேஸிஸ் அசத்தல்.. வாழ்வா – சாவா போட்டியில் டிகே அணியை வீழ்த்திய ஜேஎஸ்கே

தென்னாப்பிரிக்காவில் எஸ்கே 2025 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அந்தத் தொடரில் ஜனவரி 30ஆம் தேதி ஜோஹன்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் ஜோஹன்ஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் கண்டிப்பாக வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய ஜேஎஸ்கே டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய ராயல்ஸ் அணிக்கு சாம் ஹைன் 2, டிரே பிரிட்டோரியஸ் 19, ரூபின் ஹெர்மன் 28, வேன் புரேன் 5, கெத் டுட்ஜன் 1 ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே பின்னடைவை ஏற்படுத்தினார்கள். அதனால் 68-5 என ஆரம்பத்திலேயே தடுமாறி அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் களமிறங்கிய இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடினார்.

- Advertisement -

டு பிளேஸிஸ் அசத்தல்:

தொடர்ந்து அசத்திய அவர் 4 பவுண்டரி 3 சிக்சருடன் எஸ்ஏ தொடரில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்து 53 (39) ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். இறுதியில் கேப்டன் போர்சுன் 12* ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் ராயல்ஸ் 150-9 ரன்கள் எடுத்தது. ஜேஎஸ்கே அணிக்கு அதிகபட்சமாக டோனோவன் பெராரியா 3, சிபம்லா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்கள்.

அடுத்ததாக 151 ரன்களை துரத்திய ஜேஎஸ்கே அணிக்கு துவக்க வீரர் டேவோன் கான்வே 20 (25) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். ஆனால் மறுபுறம் கேப்டன் டு பிளேஸிஸ் நிதானம் கலந்த அதிரடியாக வெளிப்படுத்தி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அடுத்ததாக வந்த டு பிளாய் நிதானமாக விளையாடிய நிலையில் மறுபுறம் தொடர்ந்து அசத்திய டு பிளேஸிஸ் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 87 (55) ரன்கள் விளாசி அவுட்டானார்.

- Advertisement -

பிளே ஆஃப் செல்லுமா:

இறுதியில் டு பிளாய் 18*, பெரரியா 10*, ஜானி பேர்ஸ்டோ 8* ரன்கள் குவித்த உதவியுடன் 17.5 ஓவரில் 151-3 ரன்கள் எடுத்த ஜேஎஸ்கே 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த வகையில் வாழ்வா சாவா போட்டியில் வென்ற ஜேஎஸ்கே 9 போட்டிகளில் 4வது வெற்றியை பதிவு செய்துள்ளது. அதனால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பையும் அந்த அணி தக்க வைத்துக் கொண்டது.

இதையும் படிங்க: இந்திய அணி சார்பாக மாபெரும் சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் வருண் சக்ரவர்த்தி – விவரம் இதோ

குறிப்பாக தம்முடைய கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆப் செல்ல முடியும் என்ற நல்ல நிலைக்கு ஜே.எஸ்.கே வந்துள்ளது. மறுபுறம் ராயல்ஸ் அணி ஏற்கனவே 9 போட்டிகளில் 7 வெற்றிகளை பெற்று முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. எம்ஐ அணி இரண்டாவது அணியாக தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -