அனைத்து வகை போட்டிகளிலும் இருந்து ஓய்வை அறிவித்த தெ.ஆ வீரர் – ரசிகர்கள் கவலை

rsa

தென்னாபிரிக்க அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான 35 வயதாகும் ஜேபி டுமினி இதுவரை தென் ஆப்பிரிக்க அணி 46 டெஸ்ட் போட்டிகள், 199 ஒருநாள் போட்டிகள் மற்றும் 81 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Duminy 1

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரோடு ஒருநாள் கிரிக்கெட்டுக்கு ஓய்வை அறிவித்த டுமினி கடந்த 2017 ஆம் ஆண்டே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். இந்நிலையில் தற்போது டி20 போட்டிகளில் மட்டும் பங்கேற்று வந்த அவர் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் தற்போது ஓய்வினை அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : கடந்த சில மாதங்களாகவே எதிர்காலம் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வந்தேன். இந்த முடிவு சாதாரணமான முடிவு கிடையாது இருப்பினும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இதுவே சிறந்த தருணம் என்று நான் நினைக்கிறேன். அதனாலேயே இந்த முடிவை எடுத்துள்ளேன். இன்னும் கிரிக்கெட் விளையாடி பணம் சம்பாதிக்கும் வயதில் உள்ளேன்.

சி.பி.எல் மற்றும் கனடா பிரீமியர் லீக்கில் பங்கேற்று விளையாடி வருகிறேன். அங்கு சீனியர் வீரர்களை ஒதுக்க அதிக இளம் வீரர்களை தேடி வருகின்றனர். அடுத்து என்ன நடக்கும் என்பதை என்னால் கணிக்க முடியாது ஒரு கதவை மூடும் முன்பு அடுத்த கதவை திறக்க வேண்டும். ரசிகர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று டுமினி கூறியுள்ளார்.

- Advertisement -