எங்க அம்மா உங்க பேட்டிங்கை பாக்க கிரவுண்டுக்கு வராங்க. ப்ளீஸ் எனக்காக அதை பண்ணுங்க – கோலியிடம் வெ.இ கீப்பர் வேண்டுகோள்

Kohli wi keeper
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் குவித்து நல்ல நிலையில் உள்ளது. முதல்நாள் ஆட்டநேர முடிவில் விராட் கோலி 87 ரன்களுடனும், ஜடேஜா 36 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். அதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் பெரிய ரன் குவிப்பை நோக்கி பலமாக சென்று கொண்டிருக்கிறது என்று கூறலாம்.

இந்த போட்டியின் மூலம் தனது 500-ஆவது சர்வதேச போட்டியில் விளையாடி வரும் இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 30-ஆவது அரை சதத்தை பதிவு செய்து 87 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் களத்தில் விளையாடி வருகிறார்.

- Advertisement -

ஜடேஜா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் 106 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த 500-ஆவது சர்வதேச போட்டியில் இதுவரை மிகச் சிறப்பாக விளையாடியவரும் விராட் கோலி பல்வேறு சாதனைகளை படைத்து வரும் வேளையில் அவருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

இந்நிலையில் டிரினிடாட் மைதானத்தில் நேற்று நடந்த முதல்நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த விக்கெட் கீப்பர் ஜோஷ்வா டா சில்வா விராட் கோலியுடன் உரையாடிய சில விடயங்கள் தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளதோடு ரசிக்கவும் வைத்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் விராட் கோலியிடம் : நீங்கள் இந்த போட்டியில் சதம் அடியுங்கள் என்று கூறுகிறார். அதற்கு பதில் அளித்த விராட் கோலி : என்னுடைய சதத்தினை காண நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்களா? என்று கேட்டார் உடனே விக்கெட் கீப்பரும் : எனக்கு தெரியும் கண்டிப்பாக நீங்கள் 100 ரன்கள் அடிப்பீர்கள் என்று கூறினார்.

இதையும் படிங்க : IND vs WI : இந்திய அணியில் மட்டும் என்ன குறை, உங்களுக்கு சுதந்திரம் இல்லையா? சொதப்பும் சீனியர் வீரரை விளாசும் ரசிகர்கள்

அதோடு விராட் கோலியிடம் : எனது அம்மா உங்களது பேட்டிங்கை காண மைதானத்திற்கு நேரில் வருவதாக போன் செய்து சொன்னார்கள். என்னால் அதை நம்பவே முடியவில்லை நிச்சயம் அவர்களுக்காக நீங்கள் சதம் அடிக்க வேண்டும் என விராட் கோலியிடம் கேட்டுக் கொண்டார். இதுகுறித்த வீடியோ வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement