தூங்கினு இருந்த சிங்கத்தை சீண்டி விட்டுட்டாங்க.. எங்களுக்கு தான் இப்போ கஷ்டம் – ஜாஷ் ஹேசல்வுட்

Hazlewood
- Advertisement -

கடந்த மாதம் சொந்த மண்ணில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் இழந்தது.

இந்தியா பலமாக கம்பேக் கொடுக்க விரும்பும் :

இதன் மூலம் 12 ஆண்டுகள் தொடர்ச்சியாக இந்திய மண்ணில் எந்தவொரு டெஸ்ட் தொடரையும் இழக்காமல் இருந்து வந்த இந்திய அணியின் வெற்றி பயணம் முடிவுக்கு வந்துள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி பெற்ற தோல்வி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்வதிலும் ஒரு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக எதிர்வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரானது இந்திய அணிக்கு மிக முக்கியமான ஒரு தொடராக மாறியுள்ளது. சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்து தற்போது ஆஸ்திரேலிய பயணத்தை எதிர்நோக்கி இருக்கும் இந்திய அணி குறித்து பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகிறது.

இவ்வேளையில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி பலமாக கம்பேக் கொடுக்க முயற்சிக்கும் என ஆஸ்திரேலியா வீரர் ஜாஷ் ஹேசல்வுட் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர் கூறுகையில் : இந்திய அணி சொந்த மண்ணில் மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் தொடரை இழந்துள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக அவர்களது தன்னம்பிக்கை கொஞ்சம் அடிபட்டிருக்கலாம். இருந்தாலும் இந்திய அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் ஆஸ்திரேலிய மண்ணில் ஏற்கனவே விளையாடிய அனுபவத்தை உடையவர்கள். எனவே இந்திய அணிக்கு இது கம்பேக் கொடுக்கும் தொடராக மாறியுள்ளது. நியூசிலாந்து அணியை பொறுத்தவரை இந்திய மண்ணில் ஒரு போட்டியை வெல்வது என்பதே கடினம்.

இதையும் படிங்க : இதுமட்டும் நடக்கலனா ரோஹித் சர்மா ரிட்டயர்டு ஆயிடுவாரு.. கோலிக்கு பிரச்சனை இல்ல – சீக்கா கணிப்பு

ஆனால் அவர்கள் மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியது மிக சிறப்பான ஒன்று. இந்திய அணி தோல்வியை சந்தித்து விட்டு இங்கு வருவதால் நிச்சயம் எங்களுக்கு எதிராக பலமான போட்டியை அளிப்பார்கள். இதன் காரணமாக தற்போது இந்தியா ஆஸ்திரேலியா தொடரானது சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளதாக அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement