- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அவர்மட்டும் இருந்திருந்தா எங்களை டயர்டு ஆக்கியே சாவடிச்சிருப்பாரு.. நல்லவேளை தப்பிச்சிட்டோம் – ஜோஷ் ஹேசல்வுட்

ஆஸ்திரேலியா அணி தங்களது சொந்த மண்ணில் கடைசியாக இரண்டு முறை இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடிய போது இந்திய அணியிடம் டெஸ்ட் தொடரை தவறவிட்டிருந்தது. அதனை தொடர்ந்து தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னதாக இந்திய அணியை சந்திக்க இருக்கிறது. அதன்படி இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரானது நவம்பர் 22-ஆம் தேதி நாளை மறுதினம் முதல் துவங்கி நடைபெற இருக்கிறது.

அவர் இந்திய அணியில் இல்லாதது மகிழ்ச்சி :

இந்த தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) அல்லது நான்குக்கு பூஜ்யம் (4-0) என்ற கணக்கில் வீழ்த்தினால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு பிரச்சனை இன்றி முன்னேறும் என்பதனால் இந்த தொடரானது இந்திய அணிக்கு மிக முக்கியமான தொடராக மாறியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடர் குறித்து பல்வேறு வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் வேளையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசல்வுட் இந்த தொடர் குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய அணியில் தற்போது புஜாரா இல்லாதது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனெனில் நாங்கள் பௌலிங் செய்யும்போது அதிக நேரம் பேட்டிங் செய்து அவர் எங்களை சோர்வடையச் செய்து விடுவார்.

புஜாரா போன்ற ஒரு பேட்ஸ்மேன் களத்தில் இருக்கும்போது எந்த ஒரு பவுலருக்குமே நிச்சயம் சிரமம் இருக்கும். அவர் இல்லை என்றாலும் தற்போதைய இந்திய அணியின் பேட்டிங் வலிமை குறையவில்லை என்று நினைக்கிறேன். இளம் வீரர்கள் பலர் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார்கள். அதனால் எங்களது திட்டங்களை நாங்கள் சரியான முறையில் வகுக்க வேண்டியது அவசியம்.

- Advertisement -

இந்திய அணியில் விராட் கோலியின் விக்கெட்டை மட்டும் வீழ்த்துவதில் கவனம் செலுத்தாமல் அனைவரது விக்கெட்டையும் வீழ்த்த கவனம் செலுத்தப் போகிறோம். ஏனெனில் தற்போதைய இந்திய அணியில் பல திறமையான வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். எனவே இம்முறை அவர்களை சமாளிக்க திட்டங்களை வகுக்க வேண்டிய தேவை உள்ளது. குறிப்பாக ரிஷப் பண்ட் போன்ற அதிரடியான வீரர்களுக்கு எதிராக மாற்று திட்டத்தை வைத்திருக்க வேண்டும்.

இதையும் படிங்க : வெளில பேசுறவங்கள பத்தி யோசிக்காதீங்க.. இதை மட்டும் பண்ணுங்க போதும் – கே.எல் ராகுலுக்கு மைக் ஹஸ்ஸி அட்வைஸ்

அவர் ஒருபுறம் அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்தால் எங்கள் வசம் டிராவிஸ் ஹெட், மிட்சல் மார்ஷ் போன்ற அதிரடியான ஆட்டக்காரர்கள் இருக்கிறார்கள் எனவே இந்திய அணியின் ஆட்டத்திற்கு ஏற்றார் போன்று இந்த தொடரில் எங்களது பதிலடி இருக்கும் என ஜோஷ் ஹேசல்வுட் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -