ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுப்போம்..! – சவால் விடும் ஆஸ்திரேலிய வீரர்..!

warner

இந்திய அணி இந்த வருடம் முழுவதும் பல தொடர்களில் பங்கேற்க உள்ளது. இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கும் ஐயர்லாந்துக்கு எதிரியான டி20 போட்டி பின்னர் அடுத்த மாதம் தொடங்க உள்ள இங்கிலாந்து சுற்று பயணம் என்று படு பிஸியாக உள்ளது. இதனை தொடர்ந்து வரும் நவம்பர் மாதம் 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட ஆஸ்திரியாவிற்கு செல்லவுள்ளது.
warnersmith

சமீபத்தில் நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில்.ஆஸ்திரேலிய அணி 5-0 என்ற கணக்கில் படு தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில் இவ்வருடம் நவம்பர் மாதம் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிற்கு சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடரில் சுடீவ் ஸ்மித் , வார்னர் போன்ற அனுபவமிக்க வீரர்கள் இல்லாமல் இருப்பது அணிக்கு கொஞ்சம் கடினமாக இருக்கும் என்று ஜோஸ் ஹேசில்வுட் கூறியுள்ளார்.

சமீபத்தில் இது குறித்து அவர் தெரிவிக்கையில்” இந்த தொடர் கண்டிப்பாக கடினமாக தான் இருக்கும், அதுவும் இந்தியா போன்ற அணிக்கு எதிராக விளையாடுவது என்பது மேலும் ஒரு கடினம். எங்கள் அணியில் சீனியர் வீரர்களான ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாதது எங்களுக்கு ஒரு விதமான வருத்தமளிக்கிறது.
josh

சொந்த மண்ணில் விளையாடும் போது நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். எங்கள் அணியில் சில அனுபவமிக்க வீரர்கள் மட்டுமே இருக்கின்றனர். இதனால் நாங்கள் கொஞ்சம் பலவீனமாக உணர்கிறோம். அதே போல அணியில் உள்ள இளம் வீரர்கள் தங்களது முழு திறமைகளை இந்த தொடரில் நிரூபிப்பார்கள் என்று நம்புகிறேன். அதற்காக அவர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட வேண்டும் ” என்று கூறியுள்ளார்.