இந்திய அணிக்கு அடித்த ஜாக்பாட்.. இரண்டாவது போட்டியில் இருந்து விலகிய ஆஸி வீரர் – விவரம் இதோ

Hazlewood
- Advertisement -

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியானது தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. ஏற்கனவே கடந்த இரண்டு முறை சொந்த மண்ணில் இந்திய அணியிடம் டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணியானது இம்முறை பதிலடி கொடுக்கும் முனைப்புடன் விளையாடி வருகிறது.

இரண்டாவது போட்டியில் இருந்து விலகிய வீரர் :

இருப்பினும் இந்திய அணிக்கு எதிராக பெர்த் நகரில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் படுமோசமான தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா அணியானது தற்போது இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

- Advertisement -

அதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 6-ஆம் தேதி அடிலெய்டு மைதானத்தில் பகல் இரவு போட்டியாக நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஹேசல்வுட் காயம் காரணமாக வெளியேறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே இந்திய அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்துள்ள ஆஸ்திரேலிய அணிக்கு இவரது விலகல் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் விடயமாக மாறியுள்ளது. ஹேசல்வுட்டுக்கு பதிலாக மாற்று வீரர்களாக இரண்டு பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் சீன் அபாட் மற்றும் பிரெண்டன் டக்கெட் ஆகிய இருவரும் அணியில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறப்பான பந்துவீச்சாளராக வலம்வரும் ஹேசல்வுட் இல்லாதது நிச்சயம் அந்த அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். மிட்சல் ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் ஆகியோர்களை விட இந்திய வீரர்களை அதிகமாக கஷ்டப்படுத்துவது ஹேசல்வுட் தான். ஆனால் அவரே இந்த இரண்டாவது போட்டியிலிருந்து விலகி உள்ளது இந்திய அணிக்கு சாதகமான விடயமாக மாறியுள்ளது.

இதையும் படிங்க : இந்திய அணி இப்போ எல்லாம் வெளில வந்து சம்பவம் செய்யும் டீமா இருக்காங்க – ரிக்கி பாண்டிங் புகழாரம்

இருப்பினும் ஜாஷ் ஹேசல்வுட்டுக்கு ஏற்பட்டிருக்கும் காயத்தின் தன்மை என்ன என்பது? குறித்த தெளிவான தகவல் வெளியாகவில்லை. ஒருவேளை காயம் அதிகமானால் அவர் இந்த தொடரில் இருந்து முழுவதுமாக வெளியேறப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement