ஆர்சிபி’யில் எனக்கு சிராஜை நல்லா தெரியும்.. அந்த காரணத்தால் விராட் மாதிரி செஞ்சதில் தப்பில்ல? ஹேசல்வுட் ஆதரவு

Josh Hazelwood
- Advertisement -

ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை விறுவிறுப்பான துவக்கத்தை பெற்றுள்ளது. அதில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணியை இரண்டாவது போட்டியில் தோற்கடித்த ஆஸ்திரேலியா தொடரை சமன் செய்துள்ளது. முன்னதாக அடிலெய்ட் நகரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டிராவிஸ் ஹெட் – முகமது சிராஜ் ஆகியோர் மோதிக்கொண்டது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

அப்போட்டியில் 140 ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றியை பறித்த டிராவிஸ் ஹெட்டை அவுட்டாக்கிய சிராஜ் வெளியே செல்லுங்கள் என்ற வகையில் ஆக்ரோசத்துடன் அனுப்பினார். அதற்கு டிராவிஸ் ஹெட்டும் சில வார்த்தைகளை பேசிக் கொண்டே சென்றார். மறுபுறம் தங்களுடைய உள்ளூர் வீரரை அப்படி அனுப்பிய சிராஜுக்கு எதிராக ஆஸ்திரேலிய ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டார்கள்.

- Advertisement -

ஹேசல்வுட் ஆதரவு:

மேலும் சில முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்களும் சிராஜை விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் போட்டியின் பரபரப்பில் சிராஜ் அவ்வாறு நடந்து கொண்டதில் எந்த தவறுமில்லை என்று ஆஸ்திரேலிய வீரர் ஜோஸ் ஹேசல்வுட் தெரிவித்துள்ளார். குறிப்பாக டிராவிஸ் ஹெட் தம்முடைய அணியின் வெற்றியை பறித்து பின்னடைவை ஏற்படுத்திய காரணத்தால் சிராஜ் அப்படி நடந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே அது தம்முடைய அணியின் வெற்றிக்காக ஆர்வத்துடன் போராடும் ஒரு தன்மையே தவிர வேண்டுமென்றே செய்த செயல் கிடையாது என்று ஹேசல்வுட் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆர்சிபி ஐபிஎல் அணியில் சிராஜுடன் என்னுடைய நேரத்தில் மகிழ்ச்சியாக இருந்தேன். அவர் தங்களுடைய அணி பந்து வீச்சு அட்டாக்கின் லீடராக இருக்கிறார்”

- Advertisement -

விராட் கோலி மாதிரி:

“அவர் விராட் கோலியை போல மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விளையாட்டின் ஓட்டத்துடன் இருந்து ரசிகர்களுடன் கலந்து எல்லா வகையான விஷயங்களையும் செய்யக்கூடிய மற்றொருவர். கடந்த சில வருடங்களாக ஐபிஎல் தொடரில் அவர் சில சீரியஸான பவுலிங் ஸ்பெல்லை வீசினார். அந்த வகையில் அவர் மிகவும் நல்ல கேரக்டர். இவ்வாறு சில நேரங்களில் நடப்பதை பார்ப்பது நன்றாக இருக்கும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: 2013 ஸ்டுவர்ட் ப்ராட் மாதிரி சிராஜ் ஆஸியின் வில்லனா சிக்கிருகாரு.. இந்தியா இதை செய்யணும்.. கவாஸ்கர் அட்வைஸ்

அவர் கூறுவது போல அதே போட்டியில் களத்திற்கு பேட்டிங் செய்யச் சென்ற சிராஜ் தம்முடைய அருகில் நின்ற டிராவிஸ் ஹெட்டிடம் தாமாக சென்று சில சமாதான வார்த்தைகளை பேசினார். மேலும் போட்டியின் முடிவில் அவரிடம் கை கொடுத்த சிராஜ் ஜென்டில்மேனாகவும் நடந்து கொண்டார். இருப்பினும் அந்த இருவருக்கும் ஐசிசி 20% போட்டி சம்பளம் அபராதமாக விதித்து தண்டனை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Advertisement