தூங்குற ராட்ஷசனை எழுப்பிட்டீங்க.. இந்தியாவின் 3 – 0 தோல்வி பற்றி ஆஸ்திரேலிய வீரர் ஹேசல்வுட் பேட்டி

Josh Hazelwood
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்தியா ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்துள்ளது. அதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியா தங்களுடைய சொந்த ஊரில் நியூசிலாந்துக்கு எதிராக ஒரு தொடரில் முழுமையான ஒய்ட்வாஷ் தோல்வியை தோல்வியை பதிவு செய்துள்ளது. அதனால் இந்திய கிரிக்கெட் அணி கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.

இந்த தோல்வியால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற அடுத்து நடைபெறும் ஆஸ்திரேலிய தொடரில் இந்தியா வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஆனால் சொந்த மண்ணிலேயே தோற்ற இந்தியா சவாலான ஆஸ்திரேலியாவில் வெல்லுமா என்பது கடினமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவின் இந்த தோல்வி தூங்கிக் கொண்டிருக்கும் ராட்ஷசனை தட்டி எழுப்பியது போல் இருக்கும் என்று ஆஸ்திரேலிய ஜோஸ் ஹேசல்வுட் வீரர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்தியா கம்பேக் கொடுக்குமா:

ஏனெனில் இந்த தோல்வியிலிருந்து மீண்டெழுந்து ஆஸ்திரேலியாவில் அதற்கு இந்தியா போராடும் என்றும் அவர் கூறியுள்ளார். அவர்களை எதிர்கொண்டு வீழ்த்த தாங்களும் தயாராக இருப்பதாக தெரிவிக்கும் ஹேசல்வுட் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அது தூங்கும் ராட்சசனை எழுப்பக்கூடும். 3 – 0 என்ற கணக்கில் வெல்வதை விட 3 – 0 என்ற கணக்கில் இந்தியா தோல்வியை பெற்றது நல்லது”

“அதன் காரணமாக அவர்களுடைய தன்னம்பிக்கை கொஞ்சம் அடிக்கப்பட்டிருக்கலாம். இருப்பினும் அவர்களில் பெரும்பாலான வீரர்கள் இங்கே ஏற்கனவே விளையாடிய அனுபவத்தைக் கொண்டுள்ளனர். அதைப்பற்றி நான் அதிகம் படிக்க விரும்பவில்லை. இந்தியா சந்தித்த தோல்வி எங்களுக்கு நல்லது. நியூசிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள்”

- Advertisement -

நியூஸிலாந்துக்கு வாழ்த்துக்கள்:

“அவர்கள் அற்புதமான கிரிக்கெட்டை விளையாடினார்கள். இந்தியாவில் 3 – 0 என்ற கணக்கில் வெல்வது நம்ப முடியாதது. உண்மையில் அங்கே ஒரு போட்டியில் வெல்வதே மிகவும் கடினமான ஒன்றாகும். ஆனால் அவர்கள் அனைத்து போட்டிகளிலும் வென்றுள்ளனர். இந்தியா தோல்வியை சந்தித்து இங்கே வருவதால் எங்களுக்கு எதிரான தொடர் பெரியதாக இருக்கும்”

இதையும் படிங்க: ரோஹித்துக்கு தைரியம் இருக்கு.. டி20 மாதிரி அந்த தொடருடன் டெஸ்ட்லயும் ஓய்வு அறிவிப்பாரு.. ஸ்ரீகாந்த் கருத்து

“இந்தியாவுக்கு எதிராக நாங்கள் விளையாடும் போட்டிகள் ஆஷஸ் தொடருக்கு நிகராக இருக்கும். ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் டிவி ரேட்டிங்ஸ் பெரியதாக இருக்கும். எனவே இந்த தொடர் மிகவும் பெரியதாக இருக்கும்” என்று கூறினார். இதையடுத்து ஆஸ்திரேலியா தொடரில் குறைந்தபட்சம் 4 வெற்றிகளை பெற்றால் மட்டுமே இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement