வலைப்பயிற்சியின் போது மயங்கி விழுந்து உயிரை விட்ட 24 வயது கிரிக்கெட் வீரர் – ரசிகர்கள் அதிர்ச்சி

Downie

உலகமே தற்போது கொரோனா என்ற கொடிய வைரஸ் காரணமாக அதிக அளவு உயிர் பலியாகி வரும் வேளையில் கிரிக்கெட் வீரர்களின் உறவினர்கள், பெற்றோர்கள் என பலரும் சமீபத்தில் உயிரிழந்து வருவது வருத்தத்தை அளித்துள்ள இவ்வேளையில் தற்போது 24 வயதான இங்கிலாந்து வீரர் ஒருவர் பயிற்சியில் பங்கேற்ற போது உயிரிழந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் செய்தியாக வெளியாகியுள்ளது.

downie 1

அதன்படி நாட்டிங்காம் நகரத்தைச் சேர்ந்த 24 வயதுக்கு உட்பட்ட வீரரான ஜோஷ் டவுனி மாரடைப்பால் கடந்த மே மாதம் 6 ஆம் தேதி உயிரிழந்துள்ளார். இந்த செய்தி தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் இடையே அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. மேலும் இப்படி இளம் வயதிலேயே இவர் உயிரிழந்துள்ளது அந்நாட்டு கிரிக்கெட் வீரர்களே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

ஜோஷ் டவுனி அடிப்படையில் ஒரு ஆசிரியராவார். பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற அவர் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களின் சம்மதத்தோடு கிரிக்கெட் விளையாடி வந்துள்ளார். பழகுவதற்கு நல்ல குணமுடைய அவரது இறப்பு குறித்து அவரது தாயார் உருக்கமான பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

downie 2

வழக்கம்போல தினமும் காலை வலைப்பயிற்சியில் மேற்கொள்வதற்காக டவுனி சென்றான். நன்றாக விளையாடிக் கொண்டிருந்த வேளையில் திடீரென அவர் மயங்கி விழுந்த அவரை சக வீரர்கள் ஆம்புலன்சில் ஏற்றி ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் இறுதிவரை அவன் கண் திறக்கவில்லை அவரை பரிசோதித்த டாக்டர்கள் முன்பே இவர் இறந்துவிட்டார் என்றும் இவர் இறப்பிற்கு காரணம் மாரடைப்பு என்றும் டாக்டர்கள் கூறியுள்ளனர்.

- Advertisement -

சிறு வயதிலிருந்தே கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ள என் மகன் மிக சகஜமாக அனைவரிடமும் பேசுவான். யாருக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்வான். இப்படி இவ்வளவு சிறிய வயதிலேயே அவன் எங்களை விட்டுப் பிரிவான் என நினைக்கவில்லை என்று அவரது தாயார் கண்கலங்கி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement