உலகக்கோப்பை வின்னிங் ஜெர்சி(டீ -ஷர்ட்டை) ஏலம் விட்ட இங்கி வீரர் – மொத்த பணத்தையும் நிதியுதவியாக வழங்கி அசத்தல்

- Advertisement -

கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் ஐ.சி.சி 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற்றது. அந்த தொடரில் முதல் முறையாக இங்கிலாந்து அணி உலக கோப்பை தொடரை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. நியூசிலாந்து அணிக்கு எதிராக பல சர்ச்சைகளை கடந்து இந்த உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு கொடுக்கப்பட்டது.

England

- Advertisement -

அதனை தொடர்ந்து பல தொடர்களாக சிறப்பாக விளையாடிவரும் இங்கிலாந்து அணி கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சமீபத்திய தொடரை ரத்து செய்து நாடு திரும்பினார்கள். மேலும் அந்த அணியின் துவக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ்க்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் சோதனை செய்யப்பட்டது. மேலும் சோதனையின் முடிவில் அவருக்கு நோய் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் கரோனா வைரஸ் தற்போது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் சிகிச்சைக்கு தேவைப்படும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் இதர செலவுகளுக்கு அனைவரும் தங்களது உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் அதற்கு நிதி திரட்டும் வகையில் களமிறங்கியுள்ளார் ஜோஸ் பட்லர்.

joes buttler

ஆமாம் தான் உலக கோப்பை இறுதிப்போட்டியில் அணிந்து விளையாடிய ஜெர்சியை ஏலம் விடுவதாக அறிவித்துள்ளார். இந்த ஏலத்தின் மூலம் வரும் பணத்தை மருத்துவ உபகரணங்கள் வாங்கும் மற்ற மருத்துவ சாதனங்களுக்காக கொடுக்கப் போவதாக தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவை மறுபதிவு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு ஸ்டீவன் ஸ்மித், சுரேஷ் ரெய்னா மற்றும் விராட் கோலி ஆகியோரை கேட்டுக்கொண்டார்.

- Advertisement -

இந்நிலையில் இங்கிலாந்தில் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் பாதிப்பினால் பாதிப்படைந்துள்ள நிலையில் தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் தரப்பில் 4.50 கோடி வழங்க முடிவு செய்யப்பட்டது. மேலும் ஜாஸ் பட்லர் தனது உலகக்கோப்பை டீ-சர்ட்டை ஏலம் விட்டு அதன் மூலம் 61 லட்ச ரூபாய் திரட்டினார்.

Buttler

மொத்தம் 82 பேர் இந்த ஏலத்தில் கலந்து கொண்டு அந்த டீ-சர்ட்டை ஏலம் கேட்டனர். இறுதியில் 61 லட்ச ரூபாய்க்கு அந்த டீ- சர்ட் இணையத்தில் ஏலம் போனது. இதன் மூலம் கிடைக்கும் அனைத்து பணத்தையும் லண்டனில் உள்ள நோயாளிகள் சிகிச்சை மையமான இரண்டு ஆஸ்பத்திரிகளுக்கு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement