- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணிக்கு எதிரான இந்த வெற்றிக்கு காரணம் இவங்கதான்.. வெற்றிக்கு பின்னர் பேசிய – ஜாஸ் பட்லர்

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே நடைபெற்ற முடிந்த முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியானது 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

நாங்கள் பெற்ற வெற்றிக்கு இதுவே காரணம் :

அதனை தொடர்ந்து நேற்று ராஜ்கோட் நகரில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் மிகச்சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து அணி இந்திய அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதால் இந்த தொடரில் தங்கள் முதல் வெற்றியை பதிவு செய்து தற்போது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் சற்று பின்தங்கிய நிலையில் உள்ளது.

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான எஞ்சியுள்ள இரண்டு போட்டிகள் நடைபெற இருக்கிறது. நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி இந்திய அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

அதன்பிறகு பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் பேசுகையில் கூறியதாவது : இந்த போட்டியில் நமது அணியில் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசியிருந்தனர். பந்துவீச்சாளர்களது இந்த மிக சிறப்பான செயல்பாடே இந்த வெற்றிக்கு காரணமாக நினைக்கிறேன்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக ஆதில் ரஷீத் மிகச் சிறப்பாக பந்து வீசினார். அவரிடம் ஏகப்பட்ட வேரியேஷன்கள் உள்ளன. ஜோப்ரா ஆர்ச்சரும் மிகச் சிறப்பாக பந்து வீசி இருந்தார். மார்க் வுட்டும் அட்டகாசமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இப்படி பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டதாலே இந்த வெற்றி கிடைத்தது.

இதையும் படிங்க : எங்களிடம் இருந்த வெற்றியை அந்த இங்கிலாந்து வீரர் தான் பறிச்சாரு.. தோல்விக்கு பின் பேசிய – சூர்யகுமார் யாதவ்

அதேபோன்று பேட்டிங்கில் பென் டக்கெட் மிகச்சிறப்பாக விளையாடினார். இருந்தாலும் அடுத்தடுத்து விக்கெட் விழுந்த போது அது எங்களுக்கு ஏமாற்றம் அளித்தாலும் இறுதி நேரத்தில் வெற்றி தேவையான ரன்களை நாங்கள் குவித்தோம். பின்னர் அனைத்தையும் பந்துவீச்சாளர்கள் பார்த்துக் கொண்டனர் என ஜாஸ் பட்லர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -