இப்படி நடந்த பிறகு நாங்க எப்படி ஜெயிக்க முடியும்.. இந்திய அணிக்கெதிரான தோல்விக்கு பிறகு – பட்லர் வருத்தம்

Buttler
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்திய அணிக்கெதிரான தோல்விக்கு இதுதான் காரணம் :

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 132 ரன்களை மட்டுமே குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

- Advertisement -

பின்னர் 133 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 12.5 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 133 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்த தொடரின் தற்போதைய நிலையில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் கூறுகையில் : இந்த போட்டியின் ஆரம்பத்திலேயே மைதானம் பந்து வீச்சிற்கு உதவியது. இந்த மைதானம் பேட்டிங் செய்ய சாதகமான ஒரு மைதானம் தான் ஆனாலும் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்ததால் எங்களால் அதிலிருந்து மீண்டு வர முடியவில்லை.

- Advertisement -

இது போன்ற ஒரு ஹைஸ்கோரிங் மைதானத்தில் துவக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்ததால் நாங்கள் போட்டியின் ஆரம்பத்திலேயே பின்னுக்கு தள்ளப்பட்டோம். அதேபோன்று இந்திய அணியின் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதனாலே அவர்களுக்கு இந்த வெற்றி கிடைத்தது.

இதையும் படிங்க : அணில் கும்ப்ளேவிற்கு அடுத்து ரோஹித் சர்மா நிகழ்த்தவுள்ள தனித்துவ சாதனை – விவரம் இதோ

இந்த போட்டியில் இருந்து கற்றுக் கொண்ட தவறுகளை வைத்து அடுத்த போட்டியில் வலுவாக திரும்புவோம் என ஜாஸ் பட்லர் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறயிருக்கிறது.

Advertisement