இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய பின்னர் கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் மிகப்பெரிய தடுமாற்றத்தை சந்தித்து வருகிறார். அதிலும் குறிப்பாக சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 0-3 என்ற கணக்கில் இழந்தது.
ரோஹித் சர்மா நிகழ்த்தவுள்ள சாதனை :
அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரையும் இழந்த இந்திய அணி அடுத்த தோல்விகளை சந்தித்தன் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பையும் இந்திய அணி தவறவிட்டது.
இந்நிலையில் இந்த தொடர் தோல்விகளுக்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் முன்னணி வீரரான விராட் கோலி ஆகியோரது மோசமான பேட்டிங் ஃபார்மே காரணம் என்கிற பேச்சு எழுந்ததால் அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று கோரிக்கைகளும் வலுத்தது.
அதேவேளையில் இந்திய அணியின் தொடர் தோல்விகளை தவிர்க்க பயிற்சியாளர் கம்பீர் இனி எந்த வீரராக இருந்தாலும் உள்ளூர் போட்டியில் விளையாடினால்தான் அணியின் இடம் என்ற அதிரடியான கட்டளையை விதித்திருந்தார். இதன் காரணமாக இந்திய அணியை சேர்ந்த முன்னணி பலரும் ரஞ்சி டிராபி தொடரில் விளையாட இருக்கின்றனர்.
இவ்வேளையில் கேப்டன் ரோஹித் சர்மாவும் ஜனவரி 23ஆம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெற இருக்கும் ஜம்மு காஷ்மீர் அணிக்கெதிரான போட்டியில் விளையாட இருக்கிறார். இதன் மூலம் அவர் முன்னாள் இந்திய கேப்டனான அணில் கும்ப்ளேவிற்கு அடுத்து ஒரு மிக முக்கியமான சாதனை நிகழ்த்தியுள்ளார். அந்த சாதனை யாதெனில் :
இதையும் படிங்க : இங்கிலாந்து இதை செய்வாங்கன்னு தெரிஞ்சே அடிச்சேன்.. சூரியகுமார், கம்பீர் இதை கொடுத்துருக்காங்க.. அபிஷேக் பேட்டி
இதற்கு முன்னர் இந்திய கேப்டனாக இருந்து ரஞ்சி தொடரில் விளையாடிய வீரராக அணில் கும்ப்ளே கடந்த 2007-ஆம் ஆண்டு விளையாடி இருந்தார். அதற்கடுத்து தற்போது 18 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருக்கும் ஒருவர் ரஞ்சி டிராபி தொடரில் விளையாட இருக்கிறார். அந்த இரண்டாவது கேப்டனாக ரோகித் சர்மா இந்த சாதனையை நிகழ்த்துகிறார்.



