ஐ.பி.எல் தொடரில் எவ்வளவு சந்தோசம் இருக்கு தெரியுமா ? இங்கிலாந்து கிரிக்கெட் வளந்ததே இதனாலதான் – பட்லர் வெளிப்படை

Buttler
- Advertisement -

இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருப்பவர் ஜோஸ் பட்லர் . மூன்று விதமான போட்டிகளில் ஆடும் ஒரு மிகச் சில வீரர்கள் இவரும் ஒருவர். டெஸ்ட் ஒரு நாள் போட்டி டி20 போட்டி என அனைத்திலும் நன்றாக ஆடக்கூடியவர். அதுமட்டுமின்றி தோனியின் பரம ரசிகர்.

buttler

- Advertisement -

பொதுவாக இங்கிலாந்து வீரர்களை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிப்பது கிடையாது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த சட்டம் திருத்தப்பட்டு ஐபிஎல் தொடரில் இங்கிலாந்து வீரர்கள் ஆடலாம் என்று கொண்டுவரப்பட்டது. அதன்பின்னர்தான் பட்லர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். உலகம் முழுவதும் உள்ள வீரர்கள் வந்து இந்த தொடரில் விளையாடும் போது ஒரு சர்வதேச அளவிலான தரம் இருக்கும். உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் தொடரைப் போன்று தோற்றமளிக்கும்.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரை பற்றி பெருமையாக பேசியுள்ளார் ஜோஸ் பட்லர். இதுகுறித்து அவர் கூறியதாவது : எங்கள் நாட்டின் கிரிக்கெட் ஐபிஎல் தொடரால் நன்றாக வளர்ந்துள்ளது. இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஐபிஎல் தொடரில் எப்படியாவது விளையாடியே தீர வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை.

Buttler

உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் ஒரு மிகச் சிறந்த ஒரு தொடர் இருக்கிறதென்றால் அது ஐபிஎல் தொடர் தான். ஐபிஎல் தொடரில் மிகவும் தரமான வீரர்களான விராட் கோலி, ஏபிடி, கெயில் ஆகியோர் ஸ்டெய்ன், பும்ரா மற்றும் மலிங்கா போன்ற பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு விளையாடுவதை பார்ப்பது அலாதியானது. உலகின் மிகச்சிறந்த வீரர்களை ஒருவரை ஒருவர் எதிர்த்து ஆடுவது தனி மகிழ்ச்சியை அளிக்கிறது.

- Advertisement -

விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் சேர்ந்து ஆடுவதை பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். கெவின் பீட்டர்சன் தான் நாங்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுகிறது பாலம் அமைத்துக் கொடுத்தவர். எந்த ஒரு இளம் வீரருக்கும் ஐபிஎல் தொடர் மிகச்சிறந்த வளர்ச்சிப் பாதையை அமைத்துக் கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை என்று கூறியுள்ளார் பட்லர்.

Buttler 2

இங்கிலாந்து அணியை சேர்ந்த பட்லர் இவ்வாறு இந்திய டி20 தொடரான ஐ.பி.எல் தொடரை புகழ்ந்து பேசியிருப்பது சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவரின் இந்த பேட்டிக்கு கலவையான விமர்சனங்களும் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement