- Advertisement -
ஐ.பி.எல்

சாய் சுதர்சன் கூட விளையாடும்போது எனக்கு அந்த கவலையே இருக்காது – புகழ்ந்து தள்ளிய ஜாஸ் பட்லர்

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி அசத்தியிருந்தார். நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக துவக்க வீரராக களமிறங்கிய அவர் 15 போட்டிகளில் விளையாடிய 1 சதம் மற்றும் 6 அரைசதம் என 759 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அவரது இந்த ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டினை பெற்றிருந்தது.

சாய் சுதர்சன் ஒரு நம்பிக்கையான பிளேயர் : ஜாஸ் பட்லர்

ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு தற்போது இந்திய டெஸ்ட் அணியிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார்.

- Advertisement -

அப்படி தான் விளையாடிய முதல் இன்னிங்சில் டக் அவுட்டும், இரண்டாவது இன்னிங்சில் 30 ரன்களை மட்டுமே அவர் அடித்து ஏமாற்றத்தை அளித்திருந்தார். இருந்தாலும் இளம் வீரரான அவரது திறமையின் மீது நம்பிக்கை வைத்துள்ள இந்திய அணியின் நிர்வாகம் அவரை தொடர்ச்சியாக பயன்படுத்தும் என்று தெரிகிறது.

இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் சாய் சுதர்சனுடன் இணைந்து விளையாடியது குறித்து பேசியுள்ள இங்கிலாந்து அணியின் அனுபவ வீரரும், முன்னாள் கேப்டனுமான ஜாஸ் பட்லர் பல்வேறு சிறப்பான விடயங்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : உண்மையிலேயே சாய் சுதர்சனுடன் இணைந்து விளையாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

- Advertisement -

ஏனெனில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் பேட்டிங் செய்யும் விதத்தை எதிரில் இருந்து பார்த்து ரசித்துள்ளேன். அவர் மிகவும் பாசிட்டிவாக விளையாடும் ஒரு வீரர். அதுமட்டும் இன்றி அவரிடம் அனைத்து வகையான ரன் ஸ்கோரிங் ஷாட்டுகளும் உள்ளது. எங்களது பார்ட்னர்ஷிப் மிகச் சிறப்பாக இருந்ததற்கு காரணமே நாங்கள் களத்தில் நிறைய பேசிக் கொள்வது கிடையாது. ஏனெனில் இருவருமே ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டிருந்தோம்.

இதையும் படிங்க : ஓரமா உட்கார்ந்துருக்க என்னை வெச்சு மீம் போட அவர் தான் காரணம்.. எப்படியோ கண்டு பிடிச்சுறாரு.. காவ்யா மாறன்

அதனால் எங்களுக்கு இடையே நல்ல நம்பிக்கையும் இருந்தது. அதேபோன்று நான் அழுத்தத்தில் இருந்தால் கூட சாய் சுதர்சன் எதிரில் இருந்தால் எனக்கு பயம் இருக்காது. ஏனெனில் அவர் என்மீதுள்ள அழுத்தத்தை குறைக்கும் அளவிற்கு எதிர்புறம் சிறப்பாக ரன்களை குவித்து விடுவார் என சாய் சுதர்சன் குறித்து ஜாஸ் பட்லர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -