ஓரமா உட்கார்ந்துருக்க என்னை வெச்சு மீம் போட அவர் தான் காரணம்.. எப்படியோ கண்டு பிடிச்சுறாரு.. காவ்யா மாறன்

Kavya Maran
- Advertisement -

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவியா மாறன் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் புகழ் பெற்றவராக திகழ்கிறார். 2023 ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்தில் நட்சத்திர வீரர்களை வாங்கிய அவர் முதல் முறையாக ரசிகர்களின் கவனத்தை பெற்றார். அப்போதிலிருந்து ஹைதராபாத் விளையாடும் போட்டிகளை அவர் தொடர்ச்சியாக மைதானத்திற்கு வந்து நேரடியாக பார்ப்பது வழக்கமாகும்.

அந்தப் போட்டிகளை பார்க்கும் போது ஹைதராபாத் அணி வெளிப்படுத்தும் செயல்பாடுக்குத் தகுந்தார் போல் காவியா மாறனும் பல்வேறு ரியாக்சன்களை கொடுத்து விடுவார். குறிப்பாக கடந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணி மோசமாக விளையாடி லீக் சுற்றுடன் வெளியேறியது. அப்போது அவர் கொடுத்த கடுப்பான ரியாக்சன்களை வைத்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களை போட்டுத் தள்ளினர்.

- Advertisement -

எப்படியோ கண்டு பிடிக்கிறாங்க:

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளின் போது தாம் மைதானத்தின் ஓரமாக உட்கார்ந்திருப்பதாக காவியா மாறன் தெரிவித்துள்ளார். மேலும் உரிமையாளர் என்பதைத் தாண்டி ஹைதராபாத் அணி மீது ரசிகையாக ஈடுபாட்டை கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அதனால் சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் ரியாக்சன்களை கொடுத்து விடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அப்போது தம்மை கேமராமேன் எப்படியாவது தேடிக் கண்டறிந்து படம் பிடிப்பதாக காவ்யா கூறியுள்ளார். அதை வைத்து ரசிகர்கள் மீம்ஸ் போடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் செய்தியாளர் கேள்விக்கு அவர் பதிலளித்தது பின்வருமாறு. “நீங்கள் பார்ப்பதெல்லாம் என்னுடைய உணர்ச்சிகளாகும்”

- Advertisement -

காவ்யா ரியாக்சன் மீம்ஸ்:

“என்னுடைய வேலை காரணமாக நான் மைதானத்திற்கு வெளிப்புறத்தில் இருக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன். ஹைதராபாத்தில் என்னால் எதுவும் செய்ய முடியாது, அங்கே மட்டுமே உட்கார்ந்திருப்பேன். ஆனால் அகமதாபாத் அல்லது சென்னையில் நான் பல அடிகள் மேலே சென்று அமர்ந்திருப்பேன். அப்போதும் ஏதோ ஒரு வழியில் கேமராமேன் என்னை கண்டு பிடித்து விடுகிறார்”

இதையும் படிங்க: இந்தியா இதை செய்யாம விட்டா.. அப்றம் பும்ரா வந்தாலும் ஜெய்க்க வைக்க முடியாது.. எச்சரித்த அஸ்வின்

“அது மீமாக வருவதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஹைதராபாத் அணியைப் பொறுத்த வரை என்னுடைய இதயத்தை சட்டையில் அணிந்து ஆதரவு கொடுப்பேன். அப்படி நீங்கள் உங்களுடைய உயிரையும் இதயத்தையும் ஒன்றின் மீது வைத்திருக்கும் போது வெற்றி தோல்வியைப் பொறுத்து பல்வேறு உணர்வுகள் வெளிப்படும்” என்று கூறினார். காவியா மாறன் வந்த பின் 2024 ஐபிஎல் தொடரில் ஃபைனல் வரை ஹைதராபாத் சென்று அசத்தியது. தென்னாபிரிக்காவில் எஸ்ஏ தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 2023, 2024 அடுத்தடுத்த கோப்பைகளை வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement