- Advertisement -
ஐ.பி.எல்

அவசரப்பட்டு கோட்டை விட்டுட்டேன்.. அதை நெனச்சா ரொம்ப சங்கடமா இருந்தது – ஜாஸ் பட்லர் பேட்டி

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 14-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் குஜராத் ஆகிய அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியானது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதே வேளையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் இந்த தொடரில் ஆர்சிபி அணி தங்களது முதல் தோல்வியை பெற்றுள்ளது.

இன்னும் பீல்டிங்கில் முன்னேற வேண்டியது அவசியம் : ஜாஸ் பட்லர்

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் விளையாடிய ஆர்.சி.பி அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களை குவித்தது. பின்னர் 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது :

- Advertisement -

17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 170 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது குஜராத் அணி சார்பாக அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 39 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் என 73 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தான் செயல்பட்ட விதம் குறித்து பேசியிருந்த ஜாஸ் பட்லர் கூறுகையில் : இந்த போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் இந்த போட்டியின் போது மிகச் சிறப்பாக செயல்பட்டனர். ஆனாலும் பீல்டிங்கில் நாங்கள் இன்னும் முன்னேற வேண்டியது அவசியம்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக நான் தனிப்பட்ட முறையில் கீப்பிங்கில் இன்னும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த போட்டியில் 30 ரன்கள் வரை குறைவாக இருந்தது எங்களுக்கு சாதகமாக இருந்தது. பிலிப் சாலட்டின் கேட்சை விட்டபோது மிகவும் சங்கடப்பட்டேன். ஏனெனில் அவர் மிகச்சிறந்த அதிரடி வீரர். நான் கேட்சை பிடிப்பதற்கு முன்னதாகவே கிப்ஸ் போன்று அந்த விக்கெட்டை கொண்டாட நினைத்து கேட்சை கோட்டை விட்டேன்.

இதையும் படிங்க : போட்டியின் ஆரம்பத்திலே இப்படி நடந்தா ஜெயிக்குறது ரொம்ப கஷ்டம்.. முதல் தோல்விக்கு பின்னர் – ரஜத் பட்டிதார் வருத்தம்

அந்த கேட்சை விட்டது உண்மையிலேயே எனக்கு வருத்தம் அளித்தது. பின்னர் நான் பேட்டிங் செய்ய வரும்போது நிச்சயம் இந்த போட்டியின் இறுதிவரை நின்று வெற்றிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நினைப்புடனே விளையாடினேன். எங்களது அணியில் தரமான வீரர்களும், அதிரடியான ஹிட்டர்களும் உள்ளது எனக்கு சாதகமாக இருக்கிறது என ஜாஸ் பட்லர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -