பலமாக அடிப்பது மட்டும் தான் எனது பிளான். சி.எஸ்.கே அணியை வெளுத்துக்கட்டிய ராஜஸ்தான் வீரர் – விவரம் இதோ

Buttler-2
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 37 வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்தார்.

CSKvsRR

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஜடேஜா 35 ரன்களும், தோனி 28 ரன்கள் அடித்து இருந்தனர். அடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணி 17.3 அவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக ராஜஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஜோஸ் பட்லர் 48 பந்துகளில் 70 ரன்களை குவித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். அதுமட்டுமின்றி இந்த போட்டியின் ஆட்டநாயகனாக அவரே தேர்வானது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் சென்னை அணி பிளேஆப் வாய்ப்பை தவறவிட்டுள்ளது என்றே கூறலாம்.

buttler

இந்நிலையில் போட்டி குறித்து பேசிய ஆட்டநாயகன் ஜாஸ் பட்லர் கூறுகையில் : இந்த வெற்றியை பெற்றது மகிழ்ச்சி. நான் இந்த போட்டியில் என்னுடைய பேட்டிங்கில் உள்ள திறனை சிறப்பாக வெளிப்படுத்த முடிவு செய்தேன். மேலும் போதுமான அளவு சிறப்பான ஆட்டம் கடந்த போட்டியில் கிடைத்ததால் இந்த போட்டியில் இன்னும் சில ஆப்ஷன்கள் மூலம் அதிரடியை வெளிப்படுத்த நினைத்தேன்.

buttler 1

அதன்படி இன்றும் எனது பேட்டிங் சிறப்பாக அமைந்தது. நீங்கள் எப்போதும் உங்கள் மீது நம்பிக்கை வைத்து எதிர் அணியின் ஸ்கோர் கார்டு பற்றி யோசிக்காமல் விளையாடினால் நிச்சயம் உங்களால் சிறப்பாக விளையாட முடியும். நான் ஐந்தாவது இடத்தில் விளையாடியது மகிழ்ச்சி. அணி என்ன விரும்புகிறதோ அதை செய்ய நான் தயாராக உள்ளேன். இன்றைய போட்டியில் இதுதான் என்னுடைய ரோல் என்று பட்லர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement