குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து ஜாஸ் பட்லர் விலகல்.. காரணம் என்ன? – மாற்றுவீரர் அறிவிப்பு

Jos Buttler and Kusal
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 22-ஆம் தேதி துவங்கிய நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான பதினெட்டாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது மே 8-ஆம் தேதி தரம்சாலாவில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது தடைப்பட்டது. இந்தியாவில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இந்த போட்டி தடைபட்டதாகவும் மேலும் ஒரு வாரத்திற்கு ஐபிஎல் தொடர் நடைபெறாது என்றும் பி.சி.சி.ஐ அறிவித்தது.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து வெளியேறிய ஜாஸ் பட்லர் :

அதனை தொடர்ந்து தற்போது நாடு முழுவதும் பதற்றம் தணிந்து மீண்டும் இயல்பு நிலைக்கு அனைத்தும் மாறியுள்ள வேளையில் எஞ்சியுள்ள இந்த ஐபிஎல் தொடரானது மே 17-ஆம் தேதி துவங்கி ஜூன் 3-ஆம் தேதி வரை நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துவிட்டு அதற்கான அட்டவணையையும் வெளியிட்டு விட்டது.

- Advertisement -

ஆனால் ஏற்கனவே இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய வெளிநாட்டு வீரர்கள் பலரும் மீண்டும் இந்தியா வர முடியாத சூழலில் சிக்கி உள்ளதால் பல்வேறு அணிகளிலும் பல முக்கிய வீரர்கள் இந்த ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போயுள்ளது.

அந்த வகையில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம்பிடித்து விளையாடி வந்த இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜாஸ் பட்லர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தேசிய அணிக்காக பங்கேற்க இருப்பதால் எஞ்சியுள்ள ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.

- Advertisement -

குஜராத் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்பட்டு வரும் அவர் இந்த தொடரில் தனது அற்புதமான செயல்பாட்டை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தது அந்த அணியின் பல வெற்றிக்கும் உதவியிருந்தது. இந்நிலையில் தற்போது தேசிய கிரிக்கெட் காரணமாக அவர் குஜராத் அணியில் இருந்து விலகியுள்ளது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : விராட் கோலியை விட ரோஹித் சிறந்த பேட்ஸ்மேன்.. டெக்னிக், டாமினன்ஸ் பற்றிய ரசிகர் கேள்விக்கு கிப்ஸ் பதில்

இருப்பினும் ஜாஸ் பட்லருக்கு மாற்று வீரராக இலங்கை அணியை சேர்ந்த குசால் மெண்டிஸ்ஸை அந்த அணியின் நிர்வாகம் மாற்று வீரராக கொண்டு வந்துள்ளது. இலங்கை அணியை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அவர் டாப் ஆர்டரில் அதிரடியாக விளையாடக் கூடியவர் என்பதால் நிச்சயம் ஜாஸ் பட்லரின் இடத்தை நிரப்புவார் என்று நம்பலாம்.

Advertisement