ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது பாகிஸ்தான் மற்றும் துபாய் நாடுகளில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் இடம் பெற்றிருந்த அந்த அணி ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுடன் மோதும் வகையில் லீக் சுற்று போட்டிகளுக்கான அட்டவணை வகுக்கப்பட்டது.
அதிரடியான முடிவை கையிலெடுத்த ஜாஸ் பட்லர் :
அந்த வகையில் இங்கிலாந்து அணி விளையாடிய முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடமும், அடுத்ததாக இரண்டாவதாக விளையாடிய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியிடமும் தோல்வியை தழுவியதால் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இதன் காரணமாக லீக் சுற்றோடு வெளியேறும் மோசமான நிலைக்கு இங்கிலாந்து அணியானது தள்ளப்பட்டது.
அதனை அடுத்து இந்த தொடரில் எஞ்சியுள்ள ஒரு போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராகவும் இங்கிலாந்து அணி விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றாலும் அரையிறுதி சுற்றுக்கு அந்த அணி முன்னேறாது என்பதனால் ஆறுதல் வெற்றியை நோக்கி இங்கிலாந்து அணி தற்போது நகர்வுகளை செய்து வருகிறது.
இந்நிலையில் சமீபகாலமாகவே இங்கிலாந்து அணியின் மோசமான ஆட்டம் பலராலும் விமர்சிக்கப்பட்டு வரும் வேளையில் தற்போது அந்த அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளின் கேப்டன் பதிவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்திய நாட்டிற்கு கடந்த மாதம் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து அணியானது இந்திய அணியிடம் டி20 மற்றும் ஒருநாள் தொடரை இழந்த வேளையில் தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியதாலே ஜாஸ் பட்லர் கேப்டன் பதிவியிலிருந்து விலகி இருக்கிறார் என்று தெரிகிறது.
இதையும் படிங்க : இதெல்லாம் சாதாரணமான விஷயம் இல்ல.. விராட் கோலி குறித்து பூரித்து பேசிய – நியூசிலாந்து வீரர்
இதன் காரணமாக அடுத்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக யார் செயல்படுவார்கள்? என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் இங்கிலாந்து அணியின் மோசமான நிலையை கருத்தில் கொண்டு முழுநேர பேட்ஸ்மேனாக விளையாட விரும்பியே பட்லர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.



