இந்திய அணியில் இவர் ரொம்ப டேஞ்சரான பேட்ஸ்மேன். அவர் விளையாடினாலே பயமா இருக்கும் – பட்லர் ஓபன்டாக்

Buttler

இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஜாஸ் பட்லர் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற போட்டி ஒன்றிலும் தனது அதிரடியை வெளிப்படுத்திய அவர் சதம் அடித்தும் அசத்தியிருந்தார். தற்போது ஐபிஎல் தொடர் இங்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் இங்கிலாந்து திரும்பிய அவர் இணையதளத்தின் மூலமாக சில பத்திரிகைகளுக்கு பேட்டியும் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள அந்த பேட்டியில் இந்திய அணியின் டேஞ்சரான பேட்ஸ்மேன் யார் என்பது குறித்தும் சில கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

அப்படி அவர் பேசிய சில சுவாரஸ்யமான தகவலில் இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் குறித்து சில கருத்துகளை அவர் முன்வைத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் : எதிரணியில் ரிஷப் பண்ட் போன்ற திறமையான வீரர்கள் இருக்கும் போது நிச்சயம் எங்களுக்கு அழுத்தம் அதிகரிக்கும். அவர் இல்லாத அணி உடனே நாங்கள் விளையாட விரும்புகிறேன். ஏனெனில் பண்ட் மிகவும் அபாயகரமான பேட்ஸ்மேன்.

- Advertisement -

சமீப காலமாகவே அவரது பேட்டிங்கில் அனல் பறந்து வருகிறது. எந்த ஒரு கட்டத்திலும் போட்டியின் நிலைமையை அப்படியே தலைகீழாக மாற்றும் திறமை அவரிடம் உள்ளது. அதுமட்டுமின்றி எவ்வளவு பெரிய பவுலராக இருந்தாலும் பயமே இல்லாமல் எதிர்கொண்டு அவர் ரன்களை குவித்து வருகிறார். எதிர்காலத்தில் நிச்சயம் இந்திய அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக அவர் திகழ்வார் என்று பட்லர் கூறினார். மேலும் பவுலர்களுக்கு பயம் காட்டும் பேட்ஸ்மேன் என்றால் தற்போது இந்திய அணியில் ரிஷப் பண்ட் தான் என்று பட்லர் கூறியுள்ளார்.

pant 1

கடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடருக்கு முன்னர் வரை இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்ட பண்ட் சஹாவிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக மீண்டும் அணியில் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் போது 138 பந்துகளில்8 9 ரன்கள் அடித்து வரலாற்று வெற்றி பெற முக்கிய காரணமாக திகழ்ந்தார். அதே பார்முடன் இங்கிலாந்து தொடரையும் எதிர்கொண்ட அவர் மிரட்டலாக விளையாடி அசத்தியிருந்தார்.

- Advertisement -

Pant

முதல் டெஸ்ட் போட்டியின்போது 92 ரன்கள் மற்றும் 58 ரன்கள் விளாசிய மீண்டும் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக சதம் அடித்து அசத்தியிருந்தார். அதுமட்டுமின்றி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் தற்போது நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடர் என தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த இவர் 8 போட்டியில் 6 வெற்றிகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement