என்னுடைய ஆல்டைம் ஐ.பி.எல் லெவன் அணி இதுதான் – ஜாஸ் பட்லர் வெளியிட்ட பிளேயிங் லெவன்

Buttler-3
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 14வது சீச்சன், கடந்த மார்ச் மாதம் 9ஆம் தொடங்கி நடைபெற்று வந்தது. இத்தொடரில் 29 போட்டிகள் முடிந்த நிலையில், பயோ பபுள் வளையத்தையும் தாண்டி வீரர்களுக்கு இடையில் கொரானா தொற்று பரவியதால், நடப்பு ஐபிஎல் தொடரானது காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் வீரர்கள் பலரும் இந்த ஐபிஎல் தொடரில் தங்களது மனைதைக் கவர்ந்த வீரர்களைப் பற்றியும், அணிகளின் செயல்பாடுகள் குறித்தும் தங்களது கருத்துகளை கூறிவருகின்றனர். அந்த வரிசையில் தற்போது இங்கிலாந்து அணியின் வீரர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரருமான ஜாஸ் பட்லர், ஐபிஎல் தொடருக்கான தனது ஆல் டைம் ப்ளேயிங் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். அவருடைய அணியில்,

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவுடன், தன்னைத் தானே ஓப்பனிங் பேட்ஸ்மேனாக தேர்வு செய்து கொண்டிருக்கிறார். 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான பட்லர், இதுவரை 64 இன்னிங்ஸ்களில் 1968 ரன்கள் அடித்துள்ளார். ஐபிஎல் தொடர்களில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட்டும் 150க்கு மேல் இருக்கிறது. மிடில் ஆர்டரை மிகவும் வலுவானதாக அமைக்க வேண்டும் என்று எண்ணிய அவர், 3வது இடத்திற்கு பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலியையும், 4வது இடத்திற்கு பெங்களூர் அணியின் மற்றொரு வீரரான ஏபி டி வில்லியர்சையும் தேர்ந்தெடுத்து இருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் தொடர்களில் அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் இருக்கிறார். ஏபி டி வில்லியர்ஸ் 5000 ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இடத்தை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோணியை வைத்து நிரப்பியிருக்கிறார். ஜாஸ் பட்லரின் அணியில் பினிஷர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்களாக மும்பை அணியின் பொல்லார்ட் மற்றும் சென்னை அணியின் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம்பிடித்திருக்கின்றனர். முதல் ஏழு வீரர்களில் நான்கு பினிஷர்களை தேர்ந்தெடுத்திருக்கிறார் ஜாஸ் பட்லர்.

pollard

மேலும் வேகப் பந்து வீச்சாளர்கள் வரிசையில், ஐதராபாத் அணியின் புவனேஷ் குமார், மும்பை அணியின் முன்னாள் வீரரான லசித் மலிங்கா மற்றும் இன்னொரு மும்பை வீரரான ஜாஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம்பிடித்திருக்கின்றனர். ஆல்ரவுண்டரான ஜடேஜாவை தவிர்த்து, அவருடைய அணியில் இடம்பிடித்த ஒரே ஸ்பின் பௌலர் ஹர்பஜன் சிங் மட்டுமே. ஜாஸ் பட்லரின் இந்த அணியில் ஐபிஎல் தொடர்களின் சிறந்த வீரர்களான சுரேஷ் ரெய்னா, கிறிஸ் கெயில், டேவிட் வார்னர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஜாஸ் பட்லரின் ஐபிஎல் அணி:

01. ஜாஸ் பட்லர் 02. ரோஹித் சர்மா 03. விராட் கோலி 04. ஏபி டி வில்லியர்ஸ் 05. மகேந்திர சிங் தோணி 06. கைரன் பொல்லார்ட் 07. ரவீந்திர ஜடேஜா 08. புவனேஷ் குமார் 09. ஜாஸ்பிரித் பும்ரா 10. லசித் மலிங்கா 11. ஹர்பஜன் சிங்.

Advertisement