டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்த 2 பேர் உலகின் மிக அபாயகரமான பேட்ஸ்மேன்கள் – ஜோஸ் பட்லர் கணிப்பு

Buttler

14வது ஐபிஎல் தொடர் வருகிற ஏப்ரல் 9ம் தேதி தொடங்கப்பட்டு மே 30ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. ஒவ்வொரு அணிகளும் மிக சிறப்பான வகையில் தங்களை தயார் படுத்திக் கொண்டிருக்கும் வேளையில், ராஜஸ்தான் அணியின் சிறந்த வகையில் தயாராகிக் கொண்டு வருகிறது. ராஜஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் ஐபிஎல் தொடரில் மிகவும் அபாயகரமான பேட்ஸ்மேன் யார் என்பதை சமீபத்தில் கூறியுள்ளார்.

Buttler-3

மிக அபாயகரமான பேட்ஸ்மேன் யார் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ஜோஸ் பட்லர் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த கிறிஸ் கெய்ல் மற்றும் ரஸ்ஸலை குறிப்பிட்டுள்ளார். ஜோஸ் பட்லர் கூறியதுபோல இவர்கள் இருவருமே மிக அதிரடியாக ஆடக்கூடிய பேட்ஸ்மேன்கள்.

கிறிஸ் கெய்ல் இதுவரை 131 போட்டிகளில் விளையாடி 4772 ரன்களை அடித்துள்ளார்.ஐபிஎல் தொடரில் இவரது ஆவரேஜ் 41.14 மற்றும் இவரது ஸ்ட்ரைக் ரேட் 150.11 ஆகும். மேலும் 2011 மற்றும் 2012ம் ஆண்டுகளில் நடந்த ஐபிஎல் தொடரில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் அடித்து ஆரஞ்சு கேப்பையும் கைப்பற்றி இருக்கிறார். ரஸ்சல் இதுவரை 61 போட்டிகளில் விளையாடி 1517 ரன்கள் அடித்துள்ளார் ஐபிஎல் தொடரில் இவரது ஆவரேஜ் 29.75 மற்றும் இவரது ஸ்ட்ரைக் ரேட் 182.33 ஆகும்.

மேலும் பட்லரிடம் தற்பொழுது உள்ள டி20 கிரிக்கெட் வீரர்கள் எந்த வீரரை உங்களது அணியில் சேர்த்துக்கொள்ள ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, பேட் கம்மின்ஸ் சேர்த்துக் கொள்ள ஆசைப்படுகிறேன் என்று பட்லர் பதிலளித்துள்ளார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பேட் கம்மின்ஸ் சமீப காலமாகவே மிகச் சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

- Advertisement -

Russell

அவரை எங்களது இங்கிலாந்து அணியில் இணைத்துக் கொள்வதன் மூலம், ஜோஃப்ரா ஆர்ச்சர் உடன் இணைந்து மிக சிறப்பான வகையில் தனது பங்களிப்பை கொடுப்பார். மேலும் இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரே அணியில் விளையாடினால் எந்த ஒரு அணியையும் மிக எளிதாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இயலும் என்று ஜோஸ் பட்லர் இறுதியாக கூறி முடித்தார்.