நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களும், வீடியோ பதிவுகளும் வந்து கொண்டு இருக்கிறது. பல்வேறு வீரர்கள் தாங்கள் இந்த தொடரில் பெற்ற அனுபவத்தையும், இந்த ஐபிஎல் தொடரில் தங்களை கவர்ந்த விசியங்களையும் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். அந்த வகையில் இங்கிலாந்து அதிரடி ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் தனக்கு பிடித்த பேட்ஸ்மேன் மற்றும் பௌலர் யார் என்று தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து வீரரானக ஜோஸ் பட்லர் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியில் விளையாடினார். ராஜஸ்தான் அணியின் துருப்பு ஆட்டக்காரராக இருந்த பட்லர் மும்பை அணிக்கு இடையேயான 47வது லீக் போட்டியில் 53 பந்துகளில் 94 ரன்களை அடித்து விளாசியது இவரின் சிறந்த ஆட்டமாக அமைந்தது.மேலும் இந்த தொடரில் தொடர்ந்து 5 முறை அரை சத்தத்தை அடித்து 2012 ஆம் ஆண்டு ஷேவாக் புரிந்த சாதனையை சமன் செய்தார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பட்லரிடம் சில அதிவேக கேள்விகள் கேட்கபட்டது. அதில் ஐபிஎல் உங்களின் அபிமானமமான வீரராக இருந்தவர் யார் என்று கேட்ட போது, அதற்கு பட்லர் சிறிதும் யோசிக்காமல் தோனி மற்றும் கோலியின் பெயரை சொன்னார். எனக்கு தோனியை எனக்கு விக்கெட் கீபராக மிகவும் பிடிக்கும், அதே போன்று கோலி இந்திய கிரிக்கெட்டை அடித்த கட்டத்திற்கு எடுத்து செல்கிறார்.
இதன் பின்னர் உங்களுக்கு எந்த பந்து வீச்சாளர் மிகவும் பிடிக்கும் என்ற கேள்விக்கு, பும்ராவின் பெயரை சொன்னார். அவர் சிறப்பாக பந்து வீசுகிறார் என்று கூறினார். பின்னர் உங்களுக்கு இந்திய உணவு பிடிக்குமா என்ற கேள்விக்கு , எனக்கு பன்னீர் மற்றும் குழம்பு வகைகள் மிகவும் பிடித்தமான உணவு என்று பட்லர் தெரிவித்துளளார். இந்த வீடியோ பதிவை ராஜஸ்தான் அணியின் அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.