வசமாக சிக்கிய நெதர்லாந்தை வெச்சு செய்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் – படைத்த சாதனைகளின் பட்டியல் இதோ

Advertisement

நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. 2019 உலக கோப்பையை வென்று சாம்பியனாக திகழும் இங்கிலாந்து இந்த தொடரில் எளிதாக வென்று விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த நிலைமையில் ஜூன் 17-ஆம் தேதியான நேற்று இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்து 2-வது ஓவரிலேயே ஜேசன் ராயை 1 (7) ரன்னில் அவுட் செய்து அசத்தியது.

NED vs ENG Buttler

ஆனால் அடுத்து களமிறங்கிய டேவிட் மாலன் மற்றொரு தொடக்க வீரர் பிலிப் சால்ட் உடன் இணைந்து நெதர்லாந்து பவுலர்களை பவர்பிளே முடிந்தும் சரமாரியாக அடித்தார். அந்த அளவுக்கு சுமாராக பந்துவீசிய நெதர்லாந்துக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் மிரட்டலாக பேட்டிங் செய்த அந்த ஜோடியில் இருவருமே 50 ரன்கள் கடந்தும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அவுட்டாகாமல் அடம் பிடித்தனர். 2-வது விக்கெட்டுக்கு 222 ரன்கள் முரட்டுத்தனமான பார்ட்னர்ஷிப் அமைத்து நெதர்லாந்தை கதறவிட்ட இந்த ஜோடி ஒருவழியாக 30-வது ஓவரில் பிரிந்தது.

- Advertisement -

முரட்டு இங்கிலாந்து:
அதில் 14 பவுண்டரி 3 சிக்சருடன் முதல் சதமடித்த பிலிப் சால்ட் 122 (93) ரன்களில் ஆட்டமிழந்தார். அதனால் ஓரளவு நிம்மதி அடைந்த நெதர்லாந்து பவுலர்களை அடுத்து களமிறங்கிய ஜோஸ் பட்லர் என்னை மறந்து விட்டீர்களே என்பது போல் ஒவ்வொரு ஓவரிலும் சொல்லி சொல்லி பவுண்டரிகளை அடித்தார். ஏனெனில் ஐபிஎல் 2022 தொடரில் 863 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்று வெறித்தனமான பார்மில் இருக்கும் அவர் வசமாக சிக்கிய நெதர்லாந்தை வச்சு செய்து 3-வது விக்கெட்டுக்கு டேவிட் மாலன் உடன் இணைந்து 187 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இங்கிலாந்தை 400 ரன்கள் கடக்க வைத்து மேலும் வலுப்படுத்தினார்.

அப்போது 9 பவுண்டரி 3 சிக்சருடன் 125 (109) ரன்களில் டேவிட் மாலன் ஆட்டமிழக்க அடுத்து வந்த கேப்டன் மோர்கன் கோல்டன் டக் அவுட்டாகி வந்த வாக்கிலேயே சென்றார். அதானல் நிம்மதி மூச்சு விட முடியாத அளவுக்கு அடுத்ததாக களமிறங்கிய லியம் லிவிங்ஸ்டன் தனது பங்கிற்கு நெதர்லாந்தை வதம் செய்யும் வகையில் 6 பவுண்டரி 6 சிக்சர்கள் பறக்கவிட்டு 66* (22) ரன்களை 300.00 என்ற வெறித்தனமான ஸ்டிரைக் ரேட்டில் தெறிக்கவிட்டார். அவருடன் பேட்டிங் செய்து கொண்டிருந்த ஜோஸ் பட்லர் 7 பவுண்டரி 14 சிக்சருடன் 162* (70) ரன்கள் குவித்த நிலையில் 50 ஓவர்கள் முடிந்தது.

- Advertisement -

உலகசாதனை:
இல்லையேல் 500 ரன்களை தொட்டிருப்போம் என்ற வகையில் வெறி கொண்ட வேங்கையாக பேட்டிங் செய்த இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 498/4 ரன்கள் எடுத்தது. அதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற தனது சொந்த சாதனையை உடைத்த இங்கிலாந்து புதிய உலக சாதனை படைத்தது. முந்தைய சாதனை : 481/6, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக.

அதை தொடர்ந்து 499 என்ற இமாலய இலக்கை துரத்திய நெதர்லாந்து முடிந்த அளவுக்கு போராடிய போதிலும் 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு அதிக பட்சமாக எட்வர்ட்ஸ் 72* (56) ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக மொயீன் அலி 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதனால் 232 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 2-வது மிகப்பெரிய வெற்றியை சுவைத்து 1 – 0* (3) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றது.

- Advertisement -

சாதனைகள்:
முன்னதாக இப்போட்டியில் ஒன்றாக சேர்ந்து நெதர்லாந்தை கதறகதற சம்பவம் செய்த பட்லர், லிவிங்ஸ்டன், மாலன் ஆகியோர் படைத்த சாதனைகளை பற்றி பார்ப்போம்.

1. முதலில் இப்போட்டியில் சதமடித்ததன் வாயிலாக டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வகையான கிரிக்கெட்டிலும் சதமடித்த 2-வது இங்கிலாந்து பேட்ஸ்மேன் என்ற சாதனையை ஜோஸ் பட்லருக்கு பின் டேவிட் மாலன் படைத்தார்.

- Advertisement -

2. இப்போட்டியில் கடைசி நேரத்தில் களமிறங்கி வெறும் 17 பந்துகளில் அரைசதம் அடித்த லியம் லிவிங்ஸ்டன் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரை சதமடித்த இங்கிலாந்து பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. 17 பந்துகள், லியம் லிவிங்ஸ்டன், நெதர்லாந்துக்கு எதிராக, 2022*
2. 21 பந்துகள், ஜானி பேர்ஸ்டோ, அயர்லாந்துக்கு எதிராக.

3. இப்போட்டியில் 47 பந்துகளில் சதமடித்த ஜோஸ் பட்லர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த 2-வது இங்கிலாந்து பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார். முதல் 3 இடத்திலும் அவர் தான் உள்ளார். அந்தப் பட்டியல் இதோ:
1. 46 பந்துகள், பாகிஸ்தானுக்கு எதிராக
2. 47, நெதர்லாந்துக்கு எதிராக
2. 50, பாகிஸ்தானுக்கு எதிராக

4. மேலும் 65 பந்துகளில் 150 ரன்களை கடந்த அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 ரன்களை எடுத்த இங்கிலாந்து பேட்ஸ்மேன் என்ற சாதனையுடன் ஆல் டைம் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்தார். அந்த பட்டியல்:
1. ஏபி டிவிலியர்ஸ் : 64, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக, 2018
2.ஜோஸ் பட்லர் : 65, நெதர்லாந்துக்கு எதிராக, 2022*
3. ஜோஸ் பட்லர் : 76, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக, 2019
4. ஷேன் வாட்சன் : 83, வங்கதேசத்துக்கு எதிராக, 2011

buttler

5. அத்துடன் 50 பந்துகளில் சதமடித்த அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 3 முறை 50 பந்துகளுக்குள் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் பாகிஸ்தானின் சாகித் அப்ரிடி 2 முறை 50 பந்துகளில் சதமடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement