ராஜஸ்தான் அணியின் இளம்வீரரான ஜெய்ஷ்வாலுக்கு பரிசளித்த ஜாஸ் பட்லர் – என்ன சொல்லி குடுத்திருக்காரு தெரியுமா ?

Jaiswal

இந்தியாவில் நடைபெற்ற 14வது ஐபிஎல் சீசன் தற்போது வீரர்கள் இடையே ஏற்பட்ட கொரோனா பாதிப்பினால் பாதியில் நிறுத்தப்பட்டு வீரர்கள் தற்போது அவரவர் நாடுகளுக்கு திரும்ப அனுப்பப் பட்டுள்ளனர். அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து அணியின் முன்னணி வீரரான ஜாஸ் பட்லரும் நாடு திரும்பினார். அவர் நாடு திரும்புவதற்கு முன்னர் இந்த ஐபிஎல் தொடரில் அவருடன் துவக்க வீரராக களமிறங்கிய இளம் வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு கொடுத்த பரிசு குறித்த விவரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Jaiswal 1

அதன்படி இந்த சீசனில் ராஜஸ்தான் அணிக்காக பட்லர் மற்றும் மனன் வோரா ஆகியோர் முதலில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால் மனன் வோரா சரியாக விளையாடாத முடியாததால் அவருக்கு பதிலாக ஜெய்ஸ்வால் பட்லருடன் களமிறங்கினார். அவர் விளையாடிய இரண்டு இன்னிங்சிலும் ஓரளவு சிறப்பாக விளையாடினார் என்றே கூறலாம்.

- Advertisement -

இந்நிலையில் அவருடைய திறமையை பார்த்த பட்லர் அவருக்கு நாடு திரும்பும் முன்னர் ஒரு பரிசு ஒன்றினை அளித்தார். அதன்படி ஜாஸ் பட்லர் உபயோகித்த அவரது பேட்டை 19 வயதான ஜெய்ஸ்வால் இடம் கொடுத்தார். அந்த பேட்டில் “TO Yash Enjoy Your Talent Best Wishes” என்று எழுதப்பட்டிருந்தது.

அவர் குறித்து அவர் கொடுத்த இந்த பேட்டின் புகைப்படம் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு வைரலாகியுள்ளது. இளம் வீரரை ஊக்குவிக்கும் வகையில் அவர் கொடுத்த பரிசு தற்போது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது .மேலும் அண்டர் 19 அணியில் விளையாடிய ஜெய்ஷ்வால் மெல்ல மெல்ல முன்னேறி விரைவில் இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Advertisement