மறுபடியும் எனக்கு வாழ்வு தந்தது ஐபிஎல் தொடர் தான்..! இளம் அதிரடி வீரர் நெகிழ்ச்சி..! – யார் தெரியுமா..?

dhoni
- Advertisement -

இந்தியாவில் நடை பெற்று வரும் ஐபிஎல் தொடரில் பல்வேறு நாட்டின் கிரிக்கெட் வீரர்கள் பங்குபெற்று வருகின்றனர். ஐபிஎல் தொடர் பல்வேறு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு பாலமாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் பெற்ற அனுபவமே தனக்கு இங்கிலாந்து அணியில் பங்கு பெறுவதற்கு காரணமாக அமைந்து என்று இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
joes buttler

இந்திய அணி 3 டெஸ்ட் 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாட வரும் ஜூலை மாதம் இங்கிலாந்து செல்ல இருக்கிறது. இந்த தொடரின் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளார். சில மாதங்களாக இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம் பெறாமல் இருந்து பட்லர், இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடருக்கு பின்னர் இங்கிலாந்து அணியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இடம்பெற்று சிறப்பாக விளையாடி வந்தார்.

- Advertisement -

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பட்லர் தெரிவிதக்கையில் ‘நான் மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பெற ஐபிஎல் தான் முக்கிய காரணமாக இருந்தது. ஐபிஎல் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட விதம் எனக்கு தன்னம்பிக்கையை அளித்தது. என்னை பொறுத்தவரை எந்த நிற பந்தில் விளையாடுகிறோம் என்பது முக்கியம் இல்லை, எப்படி விளை யாடுகிறோம் என்பது தான் முக்கியம் ‘ என்று தெறிவித்துள்ளார்.
இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியில் விளையாடினார்.
joesbuttler

ராஜஸ்தான் அணியின் துருப்பு ஆட்டக்காரராக இருந்த பட்லர், மும்பை அணிக்கு இடையேயான 47வது லீக் போட்டியில் 53 பந்துகளில் 94 ரன்களை அடித்து விளாசியது இவரின் சிறந்த ஆட்டமாக அமைந்தது.மேலும் இந்த தொடரில் தொடர்ந்து 5 முறை அரை சத்தத்தை அடித்து 2012 ஆம் ஆண்டு ஷேவாக் புரிந்த சாதனையை சமன் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement