ராஜஸ்தானின் ராஜாவாக மீண்டும் ஒரு சாதனை படைத்த பட்லர் – விராட் கோலியின் ஆல் டைம் சாதனையை உடைப்பாரா?

Jos Buttler Vs Virat Kohli IPL
Advertisement

ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மே 7-ஆம் தேதி நடைபெற்ற 2 போட்டிகளில் மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற 52-வது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் சந்தித்தன. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் பஞ்சாப்பை பதம்பார்த்த ராஜஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று பங்கேற்ற 11 போட்டிகளில் 7-வது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறி பிளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்தது.

PBKS vs RR Arshdeep Singh Jaiswal

அந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 189/5 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ 8 பவுண்டரி 1 சிக்சருடன் 56 (40) ரன்களும் நடுவரிசையில் ராஜபக்சா 27 (18) ரன்களும் எடுக்க இறுதியில் லியம் லிவிங்ஸ்டன் 22 (14) ரன்களும் ஜிதேஷ் சர்மா 38* (18) ரன்களும் எடுத்து அதிரடியான பினிஷிங் கொடுத்தனர். ராஜஸ்தான் சார்பில் பந்துவீச்சில் அசத்திய யுஸ்வென்ற சஹால் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

- Advertisement -

ராஜஸ்தான் சூப்பர் வெற்றி:
அதை தொடர்ந்து 190 ரன்களை இலக்காக துரத்திய ராஜஸ்தானுக்கு நீண்ட நாட்களுக்குப்பின் வாய்ப்பு பெற்ற இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக 9 பவுண்டரி 2 சிக்சருடன் 68 (41) ரன்கள் குவித்து 15 ஓவர் வரை நின்று விளையாடி வெற்றியை உறுதி செய்தார். அவருடன் மிடில் ஆர்டரில் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக 23 (12) ரன்களும் தேவ்தூத் படிகள் 31 (32) ரன்களும் எடுத்தனர். இறுதியில் சிம்ரோன் ஹெட்மையர் 3 பவுண்டரி 2 சிக்சர்கள் பறக்கவிட்டு 31* (16) ரன்கள் எடுத்து அபார பினிஷிங் கொடுத்தார். அதனால் 19.4 ஓவர்களில் 190/4 ரன்களை எடுத்த ராஜஸ்தான் சிறப்பான வெற்றி பெற்றது.

RR

மறுபுறம் பேட்டிங்கில் அசத்தலாக செயல்பட்ட போதிலும் பந்து வீச்சில் இளம் வீரர் அர்ஷிதீப் சிங் மட்டும் பஞ்சாப் அணிக்காக 2 விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு போராடினார். ஆனால் இதர பவுலர்கள் சிறப்பாக கைகொடுக்க தவறியதால் பங்கேற்ற 11 போட்டிகளில் 6-வது தோல்வியை பதிவு செய்த அந்த அணி புள்ளி பட்டியலில் 7-வது இடத்திற்கு பின்தங்கி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை குறைத்துக் கொண்டது.

- Advertisement -

ராஜஸ்தான் ராஜா பட்லர்:
முன்னதாக இப்போட்டியில் 68 ரன்கள் விளாசி ராஜஸ்தானின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஜெய்ஸ்வால் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அவருடன் தொடக்க வீரராக களமிறங்கி 5 பவுண்டரி 1 சிக்சருடன் வெறும் 16 பந்துகளில் 30 ரன்களை பறக்கவிட்ட நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லரும் வெற்றியில் முக்கிய பங்காற்றினார். இந்த வருடம் முதல் போட்டியில் இருந்தே பட்டைய கிளப்பும் பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் அவர் இதுவரை பங்கேற்ற 11 போட்டிகளில் 3 அரை சதங்கள் 3 சதங்கள் உட்பட 618* ரன்களை 61.80 என்ற அபாரமான சராசரியில் குவித்து அதிக ரன்கள் விளாசிய பேட்ஸ்மேன்களின் பட்டியலில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறார்.

buttler 1

இதனால் அதற்காக வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பியை தனது வசம் வைத்துள்ள அவர் இந்த வருடம் ஏற்கனவே நிறைய சாதனைகளை படைத்துள்ளார். அதில் மேலும் ஒரு சாதனையாக நேற்றைய 30 ரன்களையும் சேர்த்து 618 ரன்களை கடந்த அவர் “ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தான் அணிக்காக 600 ரன்களை எடுத்த முதல் பேட்ஸ்மேன்” என்ற புதிய வரலாறு படைத்தார்.

- Advertisement -

கடந்த 2008 முதல் அந்த அணிக்காக நிறைய பேட்ஸ்மேன்கள் விளையாடினாலும் யாருமே 600 ரன்களை தொட்டதில்லை என்ற நிலையில் பட்லர் தான் 600 ரன்களை எடுத்து ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தானுகாக ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார். அந்த பட்டியல் இதோ:
1. ஜோஸ் பட்லர் : 618*, 2022*
2. அஜிங்கிய ரகானே : 560, 2016
3. ஜோஸ் பட்லர் : 548, 2018
4. ஷேன் வாட்சன் : 543, 2013
5. அஜிங்க்ய ரகானே : 540, 2013

Jos Buttler 103

விராட் கோலி சாதனை:
இப்படி சக்கை போடு போட்டு வரும் அவர் 2016இல் விஸ்வரூபம் எடுத்து 973 ரன்களை விளாசி ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ள விராட் கோலியின் ஆல் டைம் சாதனையை முறியடிக்கவும் பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 618 ரன்களை எடுத்துள்ள அவர் எஞ்சிய போட்டிகளில் இன்னும் 356 ரன்களை எடுத்தால் அந்த சாதனையை உடைக்கலாம்.

இதையும் படிங்க : எல்லாத்தையும் செய்த பிறகும் எனக்கு அந்த மரியாதை கிடைக்கல – ஐ.பி.எல் தொடர் குறித்து கெயில் ஷாக்கிங் பேட்டி

இருப்பினும் 2016இல் முதல் 11 போட்டிகளில் விராட் கோலி 677 ரன்களை எடுத்திருந்தார். ஆனால் பட்லர் இதுவரை 11 போட்டிகளில் 618* ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement