இவரை அணியில் மீண்டும் சேர்த்தால் கண்டிப்பாக பிரச்சனை வரும் – ஜான்டி ரோட்ஸ் புலம்பல்

ABD
- Advertisement -

தென் ஆப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அப்போதிலிருந்து தற்போதுவரை அவர் மீண்டும் எப்போது தென்னாபிரிக்க அணிக்கு வருவார் என்ற கேள்வி ரசிகர்களிடையேயும் வீரர்களிடமும் இருந்து வருகிறது. ஏனென்றால் தென்னாபிரிக்க அணியில் இவர் வெளியேறியதில் இருந்து தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வருகிறது.

ABD

இது குறித்து தென் ஆப்பிரிக்க கேப்டன் பாப் டு ப்லெசிஸ் கூட பேசியுள்ளார். அவர் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறியதை பார்த்திருப்போம். இந்நிலையில் முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் ஜான்டி ரோட்ஸ் டிவில்லியர்ஸ்-இன் வருகை குறித்து பேசியுள்ளார்.

- Advertisement -

ஏனெனில் தோல்வியில் துவண்டு கொண்டிருக்கும் தென் ஆப்பிரிக்க அணிக்கு டிவில்லியர்ஸ்-இன் வருகை சற்று ஆறுதலை ஏற்படுத்தும். அதனை தாண்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடரில் அவர் இருந்தால் அணிக்கு நல்ல உத்வேகம் தான்.

abd1

இதுகுறித்து ஜான்டி ரோட்ஸ் பேசியதாவது : ஏபி டிவில்லியர்ஸ் தேர்வானால் அது ஆச்சரியமான விஷயமாக இருக்கும். அது மிகவும் கடினமான ஒரு தேர்வாக கூட அமையும். சிறந்த அணியாக ஆட நினைக்கும் போது சில நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும். அவர் வேண்டும் என முடிவு எடுத்தால் பலரது பகையை சந்திக்க நேரிடும்.

- Advertisement -

மேலும் ஏபிடி அணிக்கு வந்தால் ஒரு இளம் வீரர் வாய்ப்பை இழப்பார். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 லீக்கில் அவர் அருமையாக ஆடியதை பார்த்தோம். நாம் அனைவரும் அவரது ரசிகர்கள் தான். அவர் மீண்டு வந்தால் ஏற்க வேண்டும். இதனை குறை கூற முடியாது அவர் உலக கோப்பையில் ஆடுவதை பார்ப்பது பிரமிப்பாக இருக்கும் இவ்வாறு கூறினார் ஜான்டி ரோட்ஸ்.

ABD-1

இருப்பினும் இத்தனை நாட்களாக தயாராகி வரும் ஒரு வீரருக்கு பதிலாக நேரடியாக டிவில்லியர்ஸ் இடம்பெற்றால் நிச்சயம் வீரர்கள் மற்றும் அணி நிர்வாகம் இடையே பிரச்னை ஏற்படவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement