என்னை இந்திய அணியில் பீல்டிங் கோச்சாக தேர்வு செய்யாததற்கு இதுவே காரணம் – ஜான்டி ரோட்ஸ் ஓபன் டாக்

Rhodes
- Advertisement -

இந்திய அணி தன்னை பீல்டிங் பயிற்சியாளராக தேர்வு செய்யாதது குறித்து தற்போது பேசியுள்ளார் முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் ஜான்டி ரோட்ஸ். சில மாதங்ககுக்கு முன்னர் இந்திய அணியின் பீல்டிங், பேட்டிங், பந்துவீச்சு ஆகிய பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பம் பிசிசிஐ சார்பில் கோரப்பட்டது.

- Advertisement -

இதில் பீல்டிங் பயிற்சியாளர்களுக்காக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் விண்ணப்பிருந்தார். கண்டிப்பாக இவரை பிசிசிஐ பீல்டிங் பயிற்சியாளராக தேர்வு செய்யும் என்று இந்திய ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் ஜாண்டி ரோட்ஸ் நிராகிரிக்கப்பட்டனர்.

அவர்க்கு பதிலாக முன்னதாக இருந்த ஸ்ரீதர் மீண்டம் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் உலகத்தரம் வாய்ந்த ஜாண்டி ரோட்ஸ் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என் காரணம் தெரியவில்லை. தற்போது இதுகுறித்து ஜாண்டி ரோட்ஸ் பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியது. : இந்நிலையில் டிவிட்டரில் இந்திய ரசிகர் ஒருவர் இந்திய அணியின் பீல்டிங் மோசமாக உள்ளது நீங்கள் ஏன் பீல்டிங் பயிற்சியாளராக இருக்க கூடாது என்று கேட்டார்
இதற்கு பதிலளித்த ஜாண்டி ரோட்ஸ்..

- Advertisement -

அவர்கள் என்னை வேண்டாம், நன்றி என்று கூறிவிட்டார்கள் என்று தெரிவித்தார். மேலும் முதல் 3 இடங்களுக்குள்ளும் என்னை அவர்கள் தேர்வு செய்யவில்லை என்று தனது வருத்தத்தினை தெரிவித்துள்ளார்.

Sridhar

மேலும் ஸ்ரீதர் தலைமையில் கடந்த பல ஆண்டுகளாக பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருவதால் அவரை மாற்றும் எண்ணம் இல்லை என்பதால் அவரை மீண்டும் இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement