சச்சின் மாதிரி ரோஹித் அதிகம் அதை செய்ய மாட்டாரு.. கோலி மாதிரி மாறவும் இல்ல.. ஜான்டி ரோட்ஸ் பாராட்டு

Jonty rhodes 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி ஒரு வழியாக ரோஹித் சர்மா தலைமையில் 2024 டி20 உலகக் கோப்பையை வென்றது. அதனால் ஐசிசி தொடர்களில் தொடர்ந்து 10 வருடங்களாக சந்தித்த தோல்விகளையும் இந்தியா உடைந்துள்ளது. அந்த வகையில் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவத்தை பயன்படுத்தி ரோகித் சர்மா இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வென்று தன்னை சிறந்த கேப்டன் என்பதை நிரூபித்துள்ளார்.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் தாம் பயிற்சியாளராக செயல்பட்ட காலங்களில் இருந்த ரோஹித் சர்மா இப்போதும் மாறவில்லை என்று தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் அந்த சமயங்களில் மெதுவாக கால்களை நகர்த்தி விளையாடுவதற்காக ரோஹித் சர்மா விமர்சிக்கப்பட்டதாகவும் ஜான்டி ரோட்ஸ் கூறியுள்ளார். அப்போது விராட் கோலி போல மாற முயற்சிக்காமல் ரோஹித் தம்முடைய இயற்கையான ஆட்டத்தையே பின்பற்றியதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

மாறாத ரோஹித் சர்மா:

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அவர் மாறவே இல்லை என்பது அபத்தமானது. பேட்டிங் செய்ய வெளியே வரும் போது அவரது நடையை நான் பார்க்கிறேன். அது கம்பீரமாகவே இருக்கிறது. அவர் சச்சின் டெண்டுல்கரை போல் கடுமையாக பயிற்சிகளை செய்வதில்லை என்பது நிச்சயம். சில நேரங்களில் வலைப்பயிற்சியில் இருந்து அவர் விலகி பயிற்சி செய்யலாம்”

“அவரிடம் சிறந்த பேட்டிங் டெக்னிக் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஒரு கட்டத்தில் அவருடைய கால் நகர்கள் அதிகமாக இல்லாததால் விமர்சனங்களை சந்தித்தார். ஏனெனில் அவர் களத்தில் மிகவும் ரிலாக்ஸாக இருந்து தம்முடைய கைகளை பயன்படுத்தி அதிகமாக விளையாடினார். அந்த வகையில் விமர்சனங்கள் வந்தாலும் அவர் தமக்கு உண்மையாக இருப்பதைப் பார்ப்பது நன்றாக இருக்கிறது. அது முக்கியம்”

- Advertisement -

குழந்தை மாதிரியான ரோஹித்:

“அதே போல நீங்கள் விராட் கோலியாக இருந்தால் மக்களின் முகத்தில் இருப்பீர்கள். அது தான் விராட் கோலி. அதற்காக ரோஹித் சர்மாவை நீங்களும் விராட் கோலி போல இருக்க வேண்டும் என்று கேட்க முடியாது. நீங்கள் உங்களுக்கு உண்மையாக இருந்தாலே தொடர்ந்து சீராக நன்றாக விளையாட முடியும். அதை ரோஹித் சர்மாவின் பயணத்தில் பார்ப்பது நன்றாக இருக்கிறது”

இதையும் படிங்க: எவ்வளவு திமிர்.. ஜஸ்ப்ரித் பும்ராவின் கருத்தை தேவையின்றி விளாசும் விராட் கோலி ரசிகர்கள்.. நடந்தது என்ன?

“தற்போது அவருக்கு எதிராக விளையாடும் போது அல்லது பயிற்சியாளராக இருக்கும் போது ரோஹித் அப்படியே இருப்பதை பார்க்க முடியும். அவர் மிகவும் வேடிக்கையானவர் என்பதை மக்கள் ரோஹித்திடம் எதிர்பார்க்க மாட்டார்கள். சீனியர் வீரரான அவர் உண்மையில் குழந்தை போல் நடந்து கொள்வார். இப்படி இருப்பது கேப்டனாக அவரிடமிருந்து அழுத்தத்தை வெளியே எடுக்கும். அது அவரது தலைமையில் விளையாடும் வீரர்களுக்கும் அழுத்தத்தை கொடுக்காது” என்று கூறினார்.

Advertisement