ரோஹித் சர்மா சொல்றது தான் கரெக்ட்.. அஸ்வின் கருத்துக்கு எதிராக ஜாம்பவான் ஜான்டி ரோட்ஸ் பேட்டி

Jonty Rhodes 2
- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தை நடத்த பிசிசிஐ தயாராகி வருகிறது. அதற்கு முன்பாக ஐபிஎல் தொடரின் அடிப்படை விதிமுறைகளில் சில மாற்றங்களை பிசிசிஐ செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக பிசிசிஐ அனைத்து ஐபிஎல் அணி நிர்வாகங்களிடம் கருத்து கேட்புக் கூட்டத்தை கடந்த மாதம் நடத்தியது.

அந்த கூட்டத்தில் இம்பேக்ட் வீரர் விதிமுறையை நீக்க வேண்டுமென டெல்லி போன்ற சில அணி நிர்வாகங்கள் கோரிக்கை வைத்தன. சொல்லப்போனால் இம்பேக்ட் வீரர் விதிமுறையால் சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் போன்ற ஆல் ரவுண்டர்கள் உருவாவதில் தடை ஏற்படுவதாக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா கடந்த ஐபிஎல் தொடரில் கூறியிருந்தார். அதே போல விராட் கோலி, டேவிட் மில்லர் போன்ற பலரும் இம்பேக்ட் வீரர் விதிமுறைக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

- Advertisement -

அஸ்வின் கருத்து:

அந்த சூழ்நிலையில் இம்பேக்ட் வீரர் விதிமுறையால் ஒரு எக்ஸ்ட்ரா இந்திய வீரருக்கு வாய்ப்பு கிடைப்பதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருந்தார். அந்த விதிமுறை இல்லாமல் போயிருந்தால் சிவம் துபே, துருவ் ஜுரேல் போன்ற வீரர்கள் கிடைத்திருக்க மாட்டார்கள் என்றும் அஸ்வின் தெரிவித்திருந்தார். எனவே அந்த விதிமுறை தொடர வேண்டும் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருந்தார்.

இந்நிலையில் ரோஹித் சர்மா கூறியது போல இம்பேக்ட் வீரர் விதிமுறை ஆல் ரவுண்டர்கள் வளர்வதை தடுப்பதாக தென்னாப்பிரிக்க ஜாம்பவான் வீரர் ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இம்பேக்ட் வீரர் விதிமுறையை சரியாக பயன்படுத்துவதில் என்னை நான் பின்தொடர்கிறேன். ஏனென்றால் வீரர்கள் அதனால் கிட்டத்தட்ட சுதந்திரத்துடன் விளையாடுகின்றனர்”

- Advertisement -

இம்பேக்ட் வீரர் விதிமுறை:

“இருப்பினும் அந்த விதிமுறையால் ஒரு ஆல் ரவுண்டரின் பாத்திரம் பாழாவது பற்றி நான் கவலைப்படுகிறேன். அது மிகவும் எளிதான வேலை. ஆனால் அது டெஸ்ட், ஒருநாள், டி20 போன்ற அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் மிகவும் முக்கியமான பங்கை செய்கிறது. எனவே நான் இம்பேக்ட் வீரர் விதிமுறையின் மிகப்பெரிய ரசிகன் அல்ல. வேண்டுமானால் நான் அந்த விதிமுறையை எப்போது சரியாக பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி தெரியாத நபராக இருக்கலாம்”

இதையும் படிங்க: வெறும் 10 தான்.. சச்சின் சாதனைக்கு முன் டிராவிட் வாழ்நாள் சாதனையை உடைக்கப் போகும் ஜோ ரூட்

“ஆனால் வீரரை அனுப்புவது என்னுடைய வேலை அல்ல. எனவே நான் அதை நினைத்து தூக்கத்தை விடவில்லை. நான் எப்போதும் போட்டிக்கு தகுந்தார் போல் என்னை மாற்றிக்கொள்ள தயாராக உள்ளேன். இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டர்களின் பங்கை நினைத்து நான் மிகவும் கவலைப்படுகிறேன். இம்பேக்ட் வீரர் விதிமுறை கிட்டத்தட்ட அதைக் கொல்கிறது” என்று கூறினார்

Advertisement