சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சில வாருடங்களாக எப்பொதும் இல்லாத வகையில் தொடர்ந்து போட்டிகளில் தோற்று வருகிறது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்றது. இதில் அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பத்தி ராயுடு அபாரமாக ஆடி 72 ரன்கள் அடித்தார். இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து வரும் போட்டிகளில் வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்த்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி ஆகிய அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் அடுத்தடுத்து தோல்வி அடைந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.
சி.எஸ்.கே அணிக்கு கடைசியாக நடைபெற்ற போட்டியில் டெல்லி அணி 175 ரன்கள் அடித்தது. 176 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடன் ஆடவில்லை. இதன் காரணமாக கடைசியில் 131 ரன்கள் மட்டுமே சேர்த்து.
44 ரன்கள் வித்தியாசத்தில் மிக மோசமான தோல்வியை சந்தித்த நிலையில், இந்த ஐபிஎல் தொடரில் முன்னதாக வெளியேறிய சுரேஷ் ரெய்னா மீண்டும் அணிக்கு வந்து அணியை வெற்றிபெற வைக்க வேண்டும் என சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் டுவிட்டரில் கேட்டு வருகின்றனர்.
சுரேஷ் ரெய்னா அணியில் இல்லாததன் காரணமாக தான், இந்த தொடர் தோல்விகளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சந்தித்து வருவதாகவும் ட்விட்டரில் ரசிகர்கள் பேசி வருகின்றனர். மேலும் பலமிழந்து தவிக்கும் சென்னை அணிக்கு உதவ நீங்கள் வந்தே ஆகவேண்டும் என்றும் ரசிகர்கள் கேட்டுவருகின்றனர்.
Of course I miss @ImRaina @ChennaiIPL and #IPL not the same without #MrIPL. Don’t get me wrong, no player is bigger than the game, and #IPL continues giving young Indian stars the opportunity to display their talents; but yes, I miss watching him play https://t.co/zd6xZGIDV9
— Jonty Rhodes (@JontyRhodes8) September 28, 2020
இந்நிலையில் சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ஜான்டி ரோட்ஸ் நிச்சயம் சென்னை அணி சுரேஷ் ரெய்னா இல்லாமல் தவிக்கிறது. அவர் இல்லாமல் ஐபிஎல் தொடர் ஐபிஎல் தொடராகவே இல்லை என்று தனது கருத்தினை அவர் தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.