இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த உலகின் டாப் கிளாஸ் பீல்டர் – விவரம் இதோ

Rhodes
- Advertisement -

இந்திய அணியின் முதன்மை பயிற்சியாளர் மற்றும் பீல்டிங், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்து வகையான பயிற்சியாளர் பதவியும் நடந்த உலகக் கோப்பைத் தொடரோடு முடிவடைந்தது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரின் காரணமாக அனைவரது பதவிக்காலமும் 45 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.

Sridhar

- Advertisement -

அதனைத் தொடர்ந்து பிசிசிஐ அனைத்து பயிற்சியாளர் பதவிக்கும் விண்ணப்பிக்க ஜூலை மாதம் 30 ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளராக ஆர் ஸ்ரீதர் பணியாற்றி வருகிறார். அவருடைய பணிக்காலமும் மேற்கிந்திய தீவுகள் தொடரோடு முடிவடைகிறது.

அந்த பீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு தற்போது தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரரும் உலகின் மிகச்சிறந்த பீல்டர் என்று கருதப்படும் ஜான்டி ரோட்ஸ் விண்ணப்பித்துள்ளார். இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ள ஜான்டி ரோட்ஸ் கூறியதாவது : நான் இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளராக விண்ணப்பித்துள்ளேன். ஏனெனில் எனக்கும் என் மனைவிக்கும் இந்தியா மிகவும் பிடிக்கும். மேலும் எங்களுடைய இரண்டு குழந்தைகள் இந்தியாவிலேயே பிறந்தன.

Rhodes 1

அது மட்டுமின்றி நாங்கள் இந்தியாவிலேயே அதிக நாட்களை தற்போது கழித்து வருகிறோம். எனவே இந்திய அணிக்கு நான் பீல்டிங் பயிற்சியாளராக மாறினால் அது எனக்கு அதிர்ஷ்டமே என்று கூறினார். 49 வயதாகும் ஜான்டி ரோட்ஸ் தென்னாப்பிரிக்க மிகச்சிறந்த பீல்டர் அவர் மும்பை அணிக்காக பல ஆண்டுகள் பீல்டிங் பயிற்சியாளராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

rhodes 2

இந்நிலையில் இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் பதவி இவருக்கு வழங்கப்பட்டால் இந்திய அணி பீல்டிங் பெருமளவு முன்னேற்றம் காணும் என்று கருதப்படுகிறது. அதனால் இவருக்கு பீல்டிங் பயிற்சியாளர் பதவி கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement