இவரைப் பார்த்து நடந்து கொள்ளுங்கள்! இந்திய வீரரை காட்டி இளம் வீரர்களுக்கு பாடம் சொல்லும் ஜான்டி ரோட்ஸ்!

jonty-rotes
- Advertisement -

இந்திய அணியின் மிக முக்கிய வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் முகமது ஷமியின். கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரிலும் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரிலும் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தியவர் இவர்தான் . அதன் பின்னர் தற்போது இந்தியாவின் மூன்று விதமான அணிகளுக்கு மிக முக்கிய வேகப்பந்து வீச்சாளராக இருக்கிறார்

Shami

- Advertisement -

முக்கியமாக டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் தூண் இவர்தான். தொடர்ந்து சிறப்பாக செயல்படும் இவர் ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக தேர்வாகியுள்ளார்

கடந்த இரண்டு வருடமாக இவர் அந்த அணிக்காக ஆடி வருகிறார். அந்த அணியின் செயல்பாடுகள் பெரிதாக இல்லை என்றாலும் இந்த வருடம் புதிய கேப்டன் புதிய பயிற்சியாளர் என அணி புதிய கட்டமைப்புபை கொண்டிருக்கிறது. கேப்டனாக கேஎல் ராகுல் செயல்படப் போகிறார்

Shami

பயிற்சியாளராக அணில் கும்ப்ளே இருக்கிறார். பீல்டிங் பயிற்சியாளராக உலகப் புகழ்பெற்ற ஜான்டி ரோட்ஸ் செயல்படப் போகிறார். இவ்வாறு இருக்கையில் ஜான்டி ரோட்ஸ் அணியில் உள்ள இளம் வீரர்களான முகமது சமி எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளார். அவர் கூறுகையில் …

- Advertisement -

துபாய்க்கு வந்த பின்னர் ஆறு நாட்கள் தனிமையில் தங்கியிருக்க வேண்டியிருந்தது . இந்த காலகட்டத்தில் எங்களை நாங்களே பார்த்துக் கொண்டு எங்களது மன வலிமையை அதிகரித்துக் கொண்டோம். மேலும் முகமது ஷமியின் செயல்பாடுகள் எனக்கு பிடித்திருக்கிறது.

jonty-rotes

அவர் போன்ற வீரர்கள்தான் இளம் வீரர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். அவரது பந்துவீச்சு மற்றும் செயல்படும் தன்மை ஆகிய அனைத்தும் என்னைக் கவர்ந்துவிட்டது. முகமது சமி தொடர்ந்து இவ்வாறு செயல்பட்டு இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் ஈர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் ஜான்டி ரோட்ஸ்.

Advertisement