மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய 4வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 387, இங்கிலாந்து 669 ரன்கள் குவித்தது. அடுத்ததாக 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடிய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால், சுதர்சன் டக் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர்.
அதனால் 0/2 ஆரம்பத்திலேயே சரிந்த இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்கும் என்று ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர். அப்போது நங்கூரமாக விளையாடிய ராகுல் 90, கேப்டன் கில் சதத்தை அடித்து 103 ரன்கள் இந்தியாவை தூக்கி நிறுத்தினர். அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஜடேஜா மற்றும் சுந்தர் இங்கிலாந்துக்கு மிகப்பெரிய தொல்லையாக மாறினார். நேரம் செல்ல செல்ல அபாரமாக விளையாடிய அந்த ஜோடி இந்தியாவை இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றி முன்னிலைப்படுத்தி சதத்தை நெருங்கினார்கள்.
மரியாதையற்ற இந்தியா:
அப்போது இனிமேலும் இந்தியாவை வீழ்த்த முடியாது என்பதை உணர்ந்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக கை கொடுக்க வந்தார். ஆனால் சுந்தர் மற்றும் ஜடேஜாவின் சதத்தை தடுக்கும் நோக்கத்தில் கை கொடுக்க வந்த ஸ்டோக்ஸ் அழைப்பை இந்திய கேப்டன் கில் ஏற்கவில்லை. அதனால் தொடர்ந்து விளையாடிய ஜடேஜாவும் சுந்தரும் சதத்தை அடித்ததும் இந்தியா போட்டியை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.
அதைப் பார்த்த இங்கிலாந்து ரசிகர்கள் இந்திய அணி கிரிக்கெட்டை நேர்மைத்தன்மையுடன் விளையாடாமல் சொந்த சாதனைகளுக்காக விளையாடியதாக விமர்சித்து வருகிறார்கள். அதன் உச்சமாக அந்நாட்டின் முன்னாள் வீரர் ஜோனதன் ட்ராட் “இதுவே இங்கிலாந்தாக இருந்திருந்தால் இந்தியா போல சொந்த சாதனைகளுக்காக மரியாதையற்ற கிரிக்கெட்டை விளையாடி இருக்காது” என்று விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
ட்ராட் விமர்சனம்:
“பென் ஸ்டோக்ஸ் மனதில் போட்டி முடிந்து விட்டது. இங்கிலாந்தின் மனதில் தனிப்பட்ட மைல்கற்கள் இருந்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இதுவே என்னுடைய கருத்து. ஒருவேளை இங்கிலாந்து பேட்ஸ்மேன்களில் யாராவது தங்களுடைய முதல் சதத்தை நெருங்கியிருந்தால் சூழ்நிலை வித்தியாசமாக இருந்திருக்கும். அதே சமயம் நீங்கள் பென் ஸ்டோக்ஸ் இருக்கையில் இருந்திருந்தால் அவர் செய்ததையே செய்ய நினைத்திருப்பீர்கள்”
இதையும் படிங்க: இந்த அவமானம் தேவையா? இந்தியா பயந்து விட்டதாக கலாய்த்து ப்ரூக்.. கடைசியில் பல்ப் வாங்கிய சம்பவம்
“சொல்லப்போனால் ஒருவேளை இந்திய கேப்டன் அப்படி கை கொடுக்க வந்திருந்தாலும் இங்கிலாந்து அதை ஏற்று கை கொடுத்திருக்கும். குறிப்பாக கில் இதே சூழ்நிலையில் இருந்து இங்கிலாந்து பேட்ஸ்மேனிடம் கை கொடுத்திருந்தால் அதை இங்கிலாந்தினர் ஏற்று வெளியே நடந்திருப்பார்கள். அது தான் டெஸ்ட் கிரிக்கெட்டாகும். கடினமாக விளையாடப்படும் அது நியாயமாகவும் விளையாடப்படுகிறது. அதில் ஒரு குறியீடு மற்றும் ஒரு வகையான நெறிமுறைகள் உள்ளன. அந்த விளையாட்டு ஒருவருக்கொருவர் சமமான மரியாதையுடன் விளையாடப்படுகிறது” என்று கூறினார்.



