இங்கிலாந்துக்கு எதிராக மான்செஸ்டரில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தோல்வியிலிருந்து தப்பிய இந்தியா டிரா செய்தது. குறிப்பாக 3வது இன்னிங்ஸில் 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இந்தியாவுக்கு சுதர்சன், ஜெய்ஸ்வால் டக் அவுட்டானார்கள். அதனால் 0/2 என ஆரம்பத்திலேயே விழுந்த இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்குமோ என்று ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
அப்போது நங்கூரத்தைப் போட்ட கேஎல் ராகுல் 90, கேப்டன் கில் சதத்தை அடித்து 103 ரன்கள் குறித்து இந்தியாவை தூக்கினார். அதை வீணடிக்காமல் ஜடேஜா மற்றும் சுந்தர் ஆகியோரும் சதத்தை அடித்து 107*, 101* ரன்கள் குவித்து மிரட்டினார்கள். அதனால் இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து தப்பிய இந்தியா முன்னிலைப் பெற்று போட்டியை டிரா செய்தது.
கலாய்த்த ப்ரூக்:
முன்னதாக இத்தொடரின் முதல் போட்டியில் 371 ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்த இங்கிலாந்து அணி இந்தியாவை தோற்கடித்தது. அப்போது 371 அல்ல, இந்தியா 450 – 500 ரன்களை இலக்காக கொடுத்தாலும் சேசிங் செய்வோம் என்று இங்கிலாந்தின் ஹாரி ப்ரூக் தெரிவித்திருந்தார். ஆனால் 2வது போட்டியில் இங்கிலாந்தை அடித்து நொறுக்கிய இந்தியா 608 என்ற பிரம்மாண்ட இலக்கை நிர்ணயித்து 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது.
அப்போது 450 – 500 ரன்களை இலக்காக நிர்ணயத்தால் இங்கிலாந்து சேசிங் செய்து விடும் என்ற பயத்தில் இந்தியா 608 ரன்களை இலக்கை நிர்ணயித்ததாக ஹாரி ப்ரூக் கூறினார். அந்த தன்னம்பிக்கையை வைத்து எஞ்சிய 2 போட்டிகளில் இந்தியாவை தோற்கடிப்போம் என்று அவர் 4வது போட்டி துவங்குவதற்கு முன் சொல்லி கலாய்த்திருந்தார். அந்த சூழ்நிலையில் இப்போட்டியில் ஜடேஜா மற்றும் சுந்தர் ஆகியோர் நங்கூரமாக விளையாடி இங்கிலாந்தின் வெற்றியைத் தடுத்து சதத்தை நெருங்கினார்கள்.
பல்ப் வாங்கிய ப்ரூக்:
அதைப் பார்த்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இனிமேலும் இந்தியாவை தோற்கடிக்க முடிக்க முடியாது என்பதை உணர்ந்து டிரா செய்வதற்கு கை கொடுத்தார். ஆனால் இந்திய கேப்டன் அதற்கு சம்மதம் தெரிவிக்காததால் தொடர்ந்து விளையாடிய ஜடேஜா ஹாரி ப்ரூக்கிற்கு எதிராக சிக்சரை பறக்க விட்டு சதத்தை தொட்டார். அப்போது ஹாரி ப்ரூக் இத்துடன் இந்தியா போட்டியை முடித்துக் கொள்வார்கள் என்று நினைத்து ஜடேஜாவிடம் கை கொடுக்க சென்றார்.
ஆனால் அதையெல்லாம் கண்டுக்கொள்ளாத ஜடேஜா சதத்தை கொண்டாடினார். அதே போல சுந்தரம் அவரை கண்டுகொள்ளாமல் ஜடேஜாவை பாராட்டினார். அதிலிருந்து “இந்தியா பயந்து விட்டதாக சொன்ன ஹரி ப்ரூக் கடைசி ஒரு மணி நேரத்தில் இந்திய பேட்ஸ்மேன்களிடம் அடி வாங்குவதற்கு பயந்து கை கொடுக்க வந்தார்” என்றே சொல்லலாம். ஆனால் ஜடேஜா பதிலுக்கு கை கொடுக்காததால் ஹரி ப்ரூக் பல்ப் வாங்கினார் என்றும் சொல்லலாம்.
இதையும் படிங்க: முதல் இந்திய வீரராக இங்கிலாந்து மண்ணில் சரித்திர சாதனையை நிகழ்த்திய ரவீந்திர ஜடேஜா – விவரம் இதோ
அதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் இந்த அவமானம் தேவையா என்று சமூக வலைதளங்களில் ப்ரூக்கை கலாய்த்து வருகிறார்கள். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் சுந்தரும் சதத்தை அடித்த பின் இந்தியா டிரா செய்வதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து கடைசி போட்டியில் வென்றால் தொடரை சமன் செய்ய முடியும் என்ற நிலைக்கு இந்தியா வந்துள்ளது.



