32 வயசானாலும் இன்னும் 10 வருஷம் அவரால சூப்பரா ஆடமுடியும். அவர் ஒரு பிரிலியன்ட் பிளேயர் – பேர்ஸ்டோ புகழாரம்

Bairstow
- Advertisement -

இங்கிலாந்து அணியானது தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது நேற்று முன்தினம் ஜூன் 16-ஆம் தேதி எட்ஜ்பேஸ்டன் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகளை இழந்து 393 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.

ENG

- Advertisement -

பின்னர் தங்களது முதல் இன்னிங்சில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்களை குவித்துள்ளது. இன்னும் இங்கிலாந்து அணியை விட ஆஸ்திரேலியா அணி 82 ரன்கள் மட்டுமே பின் தங்கிய நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக அந்த அணியின் முன்னாள் கேப்டனும், அனுபவ வீரருமான ஜோ ரூட் 152 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் என 118 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.

Root

இந்நிலையில் அவரது இந்த சிறப்பான பேட்டிங்கை பாராட்டியுள்ள இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான பேரிஸ்டோ இன்னும் பத்து ஆண்டுகள் கூட விளையாடும் அளவிற்கு ஜோ ரூட் சிறப்பான ஒரு இன்னிங்சை இந்த போட்டியில் விளையாடியுள்ளார் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

ஜோ ரூட் ஒரு பிரிலியன்ட் பிளேயர். அவர் விளையாடிய விதத்தை எதிரில் இருந்து பார்க்கும்போது நிச்சயம் அவர் இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான வீரராக அடுத்த பத்து ஆண்டுகளுக்கு திகழ முடியும் என்கிற நம்பிக்கை என்னிடம் இருக்கிறது. அதோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் 25 ஆயிரம் ரன்களை தொடுவதற்கு கூட அவரிடம் ஆட்டம் இருப்பதாக தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணியில் தோனியை போலவே நிதானமாவும் பொறுமையாவும் இருப்பார் இவர்தான் – சுரேஷ் ரெய்னா புகழாரம்

டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீபத்தில் 11000 ரன்களை பூர்த்தி செய்த ஜோ ரூட் தற்போது முப்பதாவது சதத்தை டெஸ்ட் போட்டிகளில் அடித்துள்ளார். அவருக்கு முன்னதாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 31 சதங்களுடன் முன்னிலை வகிக்கும் வேளையில் இந்த ஆஷஸ் தொடரிலேயே அவர் ஸ்மித்தை முந்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement