தனக்கு தானே காயம் ஏற்படுத்திக்கொண்டு டி20 உ.கோ அணியில் வாய்ப்பை இழந்த ஸ்டார் பிளேயர் – பரிதாப கதை

IND vs ENG Jos Buttler
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் இன்னும் சில வாரங்களில் டி20 உலக கோப்பை தொடரானது நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளின் வீரர்களின் பட்டியலையும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐசிசி கெடு விதித்தன் காரணமாக தற்போது ஒவ்வொரு அணியாக தங்களது அணியின் உலகக்கோப்பை வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் தங்களது உலகக்கோப்பை அணியை வெளியிட்டுள்ளன.

IND vs ENG Jasprit Bumrah

- Advertisement -

அந்தவகையில் இங்கிலாந்து அணியும் தங்களது உலகக்கோப்பை அணியை வெளியிட்டுள்ளது. அதில் கேப்டனாக ஜாஸ் பட்லர் இம்முறை செயல்பட இருக்கிறார். சமீபத்தில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருந்த மோர்கன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதால் அதனை தொடர்ந்து கேப்டன் பொறுப்பு ஏற்ற பட்லர் முதல் முறையாக இந்த உலகக் கோப்பை அணியை தலைமை தாங்கி வழிநடத்த இருக்கிறார்.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னணி அதிரடி துவக்க வீரரான ஜானி பேர்ஸ்டோ இந்த டி20 உலக கோப்பையில் காயம் காரணமாக இடம் பெற மாட்டார் என்ற தகவலை நேற்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வந்த பேர்ஸ்டோ 3 ஆவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கமாட்டார் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.

Bairstow-2

அதன்படி இரண்டாவது டெஸ்ட் போட்டிற்கு பிறகு ஓய்வு வேளையில் கோல்ப் விளையாடுகையில் தனது விரலில் காயமடைந்து கொண்ட பேர்ஸ்டோவின் விரலில் ஏற்பட்ட காயம் எலும்பு முறிவு வரை சென்றதால் அவர் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை என்று அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் மேலும் அவரது காயத்தின் வீரியம் காரணமாக எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரையும் அவர் தவறவிடுகிறார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதிரடி ஆட்டக்காரரான ஜானி பேர்ஸ்டோ இல்லாதது இங்கிலாந்து அணிக்கு பெரிய இழப்புதான். இந்நிலையில் தனது காயம் குறித்து தகவலை வெளியிட்ட பேர்ஸ்டோ கூறுகையில் :

இதையும் படிங்க : போன முறை மிஸ் ஆயிடுச்சி. ஆனா இந்தமுறை ஆகாது. ரெடியா இருக்கோம் – எச்சரிக்கை விடுத்த பாக் வீரர்

எதிர்பாராத விதமாக கோல்ப் விளையாடும் போது நான் தவறி விழுந்ததில் இந்த காயம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக டி20 உலகக்கோப்பை தொடரை தவறவிடுவது உண்மையிலேயே வருத்தம் அளிக்கிறது. இருந்தாலும் நிச்சயம் மீண்டும் மிகச் சிறப்பாக கிரிக்கெட் களத்திற்கு திரும்புவேன் என அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement