பும்ராவிற்கு விக்கெட் விழுகாததற்குதற்கு இதுதான் காரணம். ஜான் ரைட் கூறிய தகவல் – விவரம் இதோ

Wright
- Advertisement -

இந்திய அணி நியூசிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் மூன்று போட்டியிலும், டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசாததே ஆகும். வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இந்த தொடரில் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றவில்லை .

Bumrah

- Advertisement -

டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அவரது பந்துவீச்சு முற்றிலும் எடுபடவில்லை . மிக எளிதாக எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு கையாண்டனர். இதற்கு காரணம் என்ன என தற்போது தெரிய வந்துள்ளது. தற்போது காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள பும்ரா மீண்டும் காயம்பட்டு விடக்கூடாது என கவனமாக ஆடுகிறார். இதனால் பந்துவீச்சின் வேகத்தை குறைத்து உள்ளார் .

மேலும் ஓடிவரும் தூரத்தையும் குறைத்து விட்டார். ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் வீசியது போல் நியூசிலாந்தில் வீசவில்லை. இதன் காரணமாக அவருடைய ரிதம் முற்றிலும் போய் விட்டது. இந்த ஒரு காரணத்தால்தான் அவரால் விக்கெட் எடுக்க முடியவில்லை. இது குறித்து பேசிய இந்தியாவின் முன்னாள் பயிற்சியாளர் ஜான் ரைட் கூறியதாவது.

Bumrah

பும்ரா காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளார். தற்போது தனது பழைய பார்மை கண்டுபிடிக்கும் முயற்சியில் இருக்கிறார். அனைத்து வீரர்களுக்கும் இது நடக்கும் மேலும் உண்மையான பிரச்சனை என்னவென்றால் அவரது வீடியோக்களை அனைத்து எதிரணிகளும் வைத்து ஆலோசனை செய்யும் . அவ்வாறு ஆராய்ந்து எப்படி அவரை ஆடுவது என்று கண்டுபிடித்துவிட்டார்கள் .இதனால் அவரை எளிதாக ஆடி விக்கெட்டுகளை இழந்து விடமாட்டார்கள். ஆனால் மிக புத்திசாலியான பும்ரா இதற்கு அவர் விரைவில் வழி கண்டுபிடிப்பார் இவ்வாறு கூறினார் ஜான் ரைட்

Advertisement