23 வருடத்துக்கு பின் கேம்பல் 2 சாதனை சதம்.. ஃபாலோ ஆன் கொடுத்த இந்தியாவை திருப்பி அடிக்கும் வெ.இ

Johan Campell
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக விளையாடும் 2வது டெஸ்ட் போட்டி அக்டோபர் 10ஆம் தேதி டெல்லியில் துவங்கியது. அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 518/8 ரன்கள் அடித்து டிக்ளர் செய்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 175, கேப்டன் சுப்மன் கில் 129*, சாய் சுதர்சன் 87 ரன்கள் எடுத்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ்க்கு அதிகபட்சமாக ஜோமேல் வேரிக்கன் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

அடுத்த விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியை சிறப்பாக பந்து வீசிய இந்தியா 248 ரன்களுக்கு சுருட்டியது. அதிகபட்சமாக அலிக் அதனாஸ் 41 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணிக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3, குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்ததாக இந்தியா ஃபாலோ ஆன் கொடுத்ததைத் தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சந்தர்பால் 10, அலிக் அதனாஸ் 7 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.

- Advertisement -

கேம்பல் சாதனை:

ஆனால் மற்றொரு துவக்க வீரர் ஜான் கேம்பல் நிதானமாக விளையாடி அரை சதத்தை அடித்தார். அவருடன் இணைந்து விளையாடிய சாய் ஹோப் தன்னுடைய பங்கிற்கு நங்கூரமாக பேட்டிங் செய்து இந்தியாவுக்கு சவாலைக் கொடுத்தார். 3வது நாள் மதியத்திற்கு மேல் விக்கெட்டை விடாமல் அசத்திய அந்த ஜோடி இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியது.

அதில் நேரம் செல்ல செல்ல அபாரமாக விளையாடிய கேம்பல் சிக்ஸருடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் சதத்தை அடித்தார். இதன் வாயிலாக இந்திய மண்ணில் 23 வருடங்கள் கழித்து சதத்தை டெஸ்ட் அடித்த வெஸ்ட் இண்டீஸ் ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். கடைசியாக வாவல் ஹிட்ஸ் 2002ஆம் ஆண்டு இந்தியாவின் கொல்கத்தாவில் வெஸ்ட் இண்டீஸ்க்காக சதமடித்திருந்தார்.

- Advertisement -

திருப்பி அடிக்கும் வெ.இ:

அத்துடன் இந்தியாவுக்கு எதிராக 19 வருடங்கள் கழித்து டெஸ்ட் சதத்தை அடித்த வெஸ்ட் இண்டீஸ் ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் கேம்பல் படைத்துள்ளார். கடைசியாக 2006ஆம் ஆண்டு பெசட்டரி மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணியின் டேரன் கங்கா 135 ரன்கள் அடித்திருந்தார். அவருடைய நல்ல ஆட்டத்தால் இப்பதிவிடும் போது வெஸ்ட் இண்டீஸ் 208/2 ரன்கள் குவித்துள்ளது.

இதையும் படிங்க: ஒரே போட்டியில் 2 உலகசாதனையை படைத்து அசத்திய ஸ்ம்ரிதி மந்தனா – விவரம் இதோ

களத்தில் கேம்பல் 111*, ஷாய் ஹோப் 75* ரன்கள் எடுத்துள்ளனர். அவர்களுடைய ஆட்டத்தால் இந்தத் தொடரில் முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவை திருப்பி அடித்து வருகிறது. மேலும் இந்திய அணி ஃபாலோ ஆன் கொடுத்த முடிவு தவறானதாகவே பார்க்கப்படுகிறது.

Advertisement