- Advertisement -
இந்திய கிரிக்கெட்

2 மேட்ச் வின்னர்ஸ் இல்ல.. இம்முறை இதை செய்யலன்னா ஆஸியில் இந்தியா ஜெய்க்க முடியாது.. ஜான் புச்சனன்

ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாடும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை 2024-25 டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நவம்பர் மாதம் துவங்க உள்ளது. 2018-19, 2020-21 ஆகிய கடைசி 2 தொடர்களில் ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா தோற்கடித்தது. எனவே இம்முறையும் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா ஹாட்ரிக் வெற்றிகளை பெறுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இருப்பினும் இம்முறை இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியா வெல்லும் என்று ரிக்கி பாண்டிங், ஆடம் கில்கிறிஸ்ட் போன்ற முன்னாள் வீரர்கள் சமீபத்தில் தெரிவித்தனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் 3வது முறையாக இந்தியா வெற்றி பெறுவதற்கு சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டும் என்று அந்த அணியின் நட்சத்திர முன்னாள் பயிற்சியாளர் ஜான் புச்சனன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேட்ச் வின்னர்கள் இல்லை:

மேலும் 2018-19 தொடரை வெல்ல தொடர்நாயகன் விருதை வென்ற முக்கிய பங்காற்றிய புஜாராவும், 2020-21 தொடரை வெல்ல கேப்டனாக முக்கிய பங்காற்றிய ரகானேவும் இம்முறை இல்லாதது இந்தியாவின் வெற்றி வாய்ப்பை குறைப்பதாக அவர் கணித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியாவிடம் கடந்த தொடரில் தோல்வியை சந்தித்த பின் மிட்சேல் மார்ஷ் அல்லது கேமரூன் கிரீன் ஆகியோர் இருக்கக்கூடிய வேகப்பந்து வீச்சுக்கு நேதன் லய்ன் ஆதரவளிக்கும் பவுலிங் வரிசையை ஆஸ்திரேலியா கொண்டுள்ளது”

“இது மிகவும் பவர்ஃபுல்லான பவுலிங் வரிசை. எனவே இந்திய டாப் ஆர்டரில் உள்ள ஜெய்ஸ்வால், ரோஹித், விராட் , ஸ்ரேயாஸ் போன்றவர்கள் சிறப்பாக செட்டிலாகி போட்டியை கொடுக்கக்கூடிய ஸ்கோரை எடுக்க வேண்டும். அப்போது தான் ஷமி, பும்ரா, சிராஜ் உள்ளிட்ட அவர்களுடைய பவுலர்களால் அதை முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியும். கடந்த 2 வெற்றிகள் சிறப்பானது”

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பு:

“ஆனால் அந்த 2 வெற்றிக்கு நடுவில் இருந்த ரகானே, புஜாரா ஆகியோர் இம்முறை அணியில் இருப்பது போல் தெரியவில்லை. இரு அணிகளில் உள்ள வீரர்களுமே தங்களது கேரியரில் நன்கு செயல்படக்கூடிய நிலையில் உள்ளனர். எனவே கடந்த 2 தொடர்கள் இனிமேலும் ஊசலடாது. ஆஸ்திரேலியா தங்களது சூழ்நிலைகளில் நன்றாக பேட்டிங் செய்து புரிந்து விளையாடுவதாலேயே அசத்துகிறது. கமின்ஸ், ஹேசல்வுட், ஸ்டார்க், லயன் உள்ளதால் ஆஸ்திரேலியா உலகிலேயே மிகச்சிறந்த ஆல் ரவுண்ட் அட்டாக்கை கொண்டுள்ளது”

இதையும் படிங்க: ஐசிசி தலைவர் ஜெய் ஷா கிரிக்கெட்டையும் நேர்மையையும் காப்பாற்ற.. இதை செய்யணும்.. யூனிஸ் கான் வாழ்த்து

“இந்தியா நன்றாக மட்டுமின்றி நீண்ட நேரம் பேட்டிங் செய்ய முடிந்தால் அது ஆஸ்திரேலியா பவுலர்களின் உடல் வரம்புகளை விரிவுபடுத்தி தொடரை வெல்வதற்கான பாதையை வழங்கும். ஆனால் முழுமையாக தயாராகாமல் ஆஸ்திரேலியாவில் களமிறங்குவது வெளிநாட்டு அணிகளுக்கு சவாலை கொடுக்கும். ஏனெனில் வேகம், பவுன்ஸ்க்கு சாதகமான பெர்த் போன்ற மைதானத்திற்கு அட்ஜஸ்ட் செய்ய இப்போதெல்லாம் வெளிநாட்டு அணிகள் இங்கே அதிகப் பயிற்சி போட்டிகளில் விளையாடுவதில்லை. எனவே அந்த தொடரை வெல்லும் அணியாக ஆஸ்திரேலியா துவங்கும்” என்று கூறினார்.

- Advertisement -